கல்முனை தேசிய இளைஞர் விளையாட்டு கழகம் வரலாற்று சாதனை படைத்தது

30வது தேசிய இளைஞர் உதைப்பந்தாட்ட போட்டியில் அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கல்முனை பிரதேச தேசிய இளைஞர் விளையாட்டு கழகத்தினர் வெற்றிபெற்றனர். நேற்று(23) பதுளை வின்சென்ட் டேஸ் மைதானத்தில் நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் காலி மாவட்ட இளைஞர் அணியுடன் மோதி இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இறுதிப்போட்டி அடுத்த மாதம் மாத்தறையில் நடைபெற இருக்கும்  தேசிய விளையாட்டு போட்டியில் நடைபெறவுள்ளது மேலும்  30 வது தேசிய இளைஞர் உதைப்பந்தாட்டபோட்டியில் அம்பாறை மாவட்ட அணி இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவையாகும்.கடந்த 2016 ஆண்டு அம்பாறை மாவட்ட இளைஞர் அணி மூன்றாம் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Read More

ஆசியக்கோப்பை தோல்விக்கு நான் ‘பலிகடாவா?’- நீங்கள் விரும்பினால் ஓய்வு பெறுகிறேன்: ஆஞ்சேலோ மேத்யூஸ் உருக்கமான கடிதம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் படுதோல்வியடைந்து லீக் சுற்றிலேயே வெளியேறியதையடுத்து மேத்யூஸ் கேப்டன் பதவியைப் பறித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். சந்திமால் இவருக்குப் பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். “குறைபாடுகளுக்கு பொறுப்பு ஏற்கிறேன். ஆனால் இதற்கு ஏதோ நான் மட்டுமே காரணம் என்பது போல் காட்டுவது எனக்கு துரோகம் செய்வது போல் உணர்கிறேன். அனைத்து முடிவுகளையும் நான் அணித்தேர்வாளர்கள் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஆகியோருடன் பரஸ்பர புரிதலின் பேரில்தான் எடுத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். தேர்வாளர்களும் பயிற்சியாளரும் நான் ஒருநாள் கிரிக்கெட், டி20 போட்டிகளுக்கு லாயக்கில்லை என்ற அபிப்ராயம் கொண்டிருந்தால் நான் சுமையாக இருக்க விரும்பவில்லை, இந்த இரண்டு வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதை பரிசீலிக்கிறேன். ஜூலை 2017-ல் நான் அனைத்து வடிவங்களிலிருந்தும் கேப்டன்சி பதவியைத் துறந்தேன் என்பதை நீங்கள் நினைவுகூரலாம். 5 ஆண்டுகள் இலங்கை அணியை வழிநடத்தினோம். இந்தக் காலக்கட்டத்தில்…

Read More

கடலில் 49 நாள்கள் திக்குதெரியாமல் தவித்து உயிர்பிழைத்த 19 வயது இளைஞரின் கதை

இந்தோனீசிய இளைஞர் ஒருவர் நாற்பத்து ஒன்பது நாள்கள் கடலில் திக்கு தெரியாமல் தவித்து மீண்டிருக்கிறார். ஒரு மீன்பிடி குடிசையில் கடல் நீரை குடித்து, தனது குடிசை படகில் இருந்து மரக்கட்டைகளை பயன்படுத்தி கடல் மீன்களை உண்டு இவ்வளவு நாள்கள் தாக்குப்பிடித்திருக்கிறார். இந்தோனீசிய கடல் பகுதியில் இருந்து 77 மைல் (125 கிமி) தொலைவில் ஒரு மீன்பிடி குடிசையில் அல்டி நோவல் அடிலங் இருந்துவந்தார். கடந்த ஜூலை மாதம் கடுமையான சூறாவளி காற்று காரணமாக 19 வயது இளைஞர் அடிலங் திக்குதெரியாதநிலையில் குவாம் கடல் பகுதியில் தனித்துவிடப்பட்டார். பனாமா கப்பல் ஒன்று மூலமாக அவர் மீட்கப்பட்டார். இந்தோனீசியாவின் சுலாவெசி தீவைச் சேர்ந்த அந்த பத்தொன்பது வயது இளைஞர் ‘ராம்பாங்’ எனப்படும் துடுப்புகளற்ற, எந்திரம் இல்லாத ஒரு மிதவை மீன்பிடி குடிசையில் வேலை செய்துவந்தார். ராம்பாங் விளக்குகளை போடுவதன் மூலம்…

Read More

பணத்துக்காக ஓர் இளைஞன் ‘விலைமகன்’ ஆன கதை

நீ எங்கே நிற்கிறாய் என்று தெரியுமா? உடலை விற்கும் சந்தை இது.’ இந்த கேள்வியை எதிர்கொள்ளும் நான், ஒரு ஆண், சிவப்பு விளக்கு பகுதி என அறியப்படும் உடலுக்கு பணம் கொடுக்கும் வணிகத்தில் என்னை விற்பனை செய்யத் தயாராக இருக்கிறேன். “எனக்கு தெரியும், ஆனால் எனக்கு பணம் தேவை, அதனால் இதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று பதில் சொன்னேன். என்னிடம் கேள்வி கேட்டது நடுத்தர வயதில் இருக்கும் ஒரு பெண்… இல்லை திருநங்கை. முதன்முறையாக அவரைப் பார்த்தபோது எனக்கு பயமாக இருந்தது. என்னுடைய பதிலுக்கு அவரின் மறுமொழி என்ன தெரியுமா? ‘உனக்கு தன்மானம் ஏன் கர்வம் என்றே சொல்கிறேன், அது அதிகமாக இருக்கிறது, இந்தத் தொழிலில் அது வேலைக்கு ஆகாது’ என்று அவர் சொன்னது, என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தினமும் ஒன்பது மணி நேரம் தொழில்நுட்ப…

Read More

மாலத்தீவு தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹீம் வெற்றி – இந்தியா, அமெரிக்கா வரவேற்பு

மாலத்தீவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர் இப்ராஹீம் முஹம்மது சோலீப் வெற்றி பெற்றதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீனை எதிர்த்து போட்டியிட்ட இப்ராஹீம், 1,34,616 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. யாமீன் 96,132 வாக்குகள் பெற்றுள்ளார். இந்தியாவும் அமெரிக்காவும் இந்த முடிவுகளை வரவேற்றுள்ளன. அதிகாரப்பூர்வ முடிவுகள் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிடப்படும். ஆனால், அதற்கு முன்னதாகவே இப்ராஹீமின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களுடைய முடிவை ஏற்றுக் கொள்ளும்படி, அதிபர் அப்துல்லாவுக்கு, சோலீப் அழைப்பு விடுத்துள்ளார். “மாலத்தீவில் உள்ள மக்களுக்கு, மாற்றம், அமைதி மற்றும் நீதி வேண்டும் என்று இதிலிருந்து நன்றாக தெரிகிறது” என தலைநகர் மேலில் செய்தியாளர்களிடம் பேசிய சோலீப் தெரிவித்தார். அடுத்த முறையும்…

Read More

வர்த்தகப் போரில் நாங்கள்தான் வெல்லப் போகிறோம்: சீனாவுக்கு அமெரிக்கா சவால்

சீனாவுடனான வர்த்தகப் போரில்  நாங்கள்தான் வெல்லப் போகிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்  பாம்பியோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை பாக்ஸ் தொலைக்காட்சிக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்  போப்பியோ கூறும்போது, “சீனா தனது செயல்களின் மூலம் அமெரிக்காவுக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளது. சீனா வெளிப்படைத் தன்மையுடனும், சட்டத்தை மதித்தும் நடக்க வேண்டும். மேலும் நீங்கள் அறிவு சார்ந்த சொத்துகளைத் திருட முடியாது” என்று கூறியுள்ளார். முன்னதாக, அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவில் 25% சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் சீனப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 2.5% வரி விதிக்கப்படுகிறது. இது நியாயமான வர்த்தகம் அல்ல. எனவே, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மொத்தமாக 50 பில்லியன் டாலர் வரை அதாவது  4 லட்சம் கோடி ரூபாய்  அளவிற்கு வரி விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக கடந்த…

Read More

இலங்கையின் முதலாவது மாம்பழ உற்பத்தி அபிவிருத்தி வலயம் யாழ் மற்றும் தம்புள்ளையில் அமைக்க ஏற்பாடு

இலங்கையில் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயம் தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாண பிரதேசங்களில் அமைப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. நாம் உற்பத்தி செய்வோம்இ நாம் உண்போம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தி வலயம் அந்தந்த பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளை அடையாளம் கண்டு அதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அமைவாகஇ விவசாய உற்பத்தி பயிர் வலயத்திற்கான வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படும் முதலாவது வலயமாக மாம்பழ அபிவிருத்தி வலயம் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள மாம்பழ உற்பத்தி வலயம் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது விவசாய அமைச்சு உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தும் விவசாய நவீன திட்டத்தின் கீழ் இந்த மாம்பழ உற்பத்தி வலயம் அமைக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் சிறந்த ரக ஒரு லட்ச…

Read More

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 23 ஆயிரம் பேருக்கு கடனுதவி

அரசாங்கத்தின் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற அரச வட்டி நிவாரணக் கடன் திட்ட வேலைத்திட்டத்தில் இதுவரையில் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் அடங்கலாக 23 ஆயிரம் பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு இந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதுவரையில் நான்காயிரத்து 917 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தலைமையில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற அரசாங்கத்தின் வட்டி நிவாரண கடன் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் கீழ், 16 வட்டி நிவாரணத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான முழு வட்டி அல்லது வட்டியின் ஒரு பகுதியை அரசாங்கம் சம்பந்தப்பட்ட கடன் பயனாளிகளுக்காக வங்கிகளுக்கு செலுத்துகின்றமை…

Read More

பொல்கொல்லையில் பர்தாவுடன் பரிட்சை எழுதத்தடை.

  இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பொல் கொல்ல நிலையத்தில் கடந்த வார இறுதியில் (2018.09.22,23) பட்டப் பின் கல்வி டிப்ளோமா பாடநெறியின் இறுதிப் பரீட்சை நடைபெற்றது. சனிக்கிழமை பரீட்சை மண்டபத்திற்கு பர்தா அணிந்து வந்திருந்த பல ஆசிரிய மாணவர்களை நிலையத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த பெண் பொறுப்பாளர் சங்கடத்திற்குட்படுத்தும் விதமாக நடந்து கொள்ளத் தொடங்கியதை அடுத்து சில ஆசிரிய மாணவிகள் தமது எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். அந்தப் பெண் பொறுப்பதிகாரி, காது தெரியுமாறு பர்தா கழற்றப்பட்டு பரீட்சை எழுத வேண்டும் என்று வேண்டிக் கொண்டதோடு அது தொடர்பாக தனது கட்டளைக்கு கட்டுப்படாதவர்கள் பரீட்சை விதிகளை மீறியவர்களாக அடையாளப்படுத்தப்படுவர் என்று எச்சரித்து சில மாணவிகளை அவ்வாறு அடையாளப்படுத்தியதுடன் பரீட்சை முடியும் வரையும் பரீட்சை மண்டபத்திற்குள் இது தொடர்பாக சத்தமாக ஏசியவண்ணமும் அவதூறாக பேசியும் இருந்துள்ளார். இதே பிரச்சினை இதே நிலையத்தில் கடந்த…

Read More