அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் நடால், செரீனா

ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 6-3, 6-3, 6-7 (6-8), 6-4 என்ற செட் கணக்கில் 37-ம் நிலை வீரரான ஜார்ஜியாவின் நிக்கோலஸ் பஸிலஷ்விலியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னே றினார். அமெரிக்க ஓபனில் நடால் கால் இறுதிக்கு முன்னேறுவது இது 8-வது முறையாகும். கால் இறுதியில் நடால், 9-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை எதிர்கொள்கிறார். டொமினிக் தியம் 4-வது சுற்றில் 5-ம் நிலை வீரரான தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை 7-5, 6-2, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் 3-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் மார்ட் டின் டெல்போட்ரோ…

Read More

அலட்டல் இல்லாத அமைதியான சாதனையாளர் அலிஸ்டர் குக் ஓய்வு அறிவித்தார்

இந்தியாவுக்கு எதிராக ஓவலில் நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டியே தன் இறுதி டெஸ்ட் போட்டி என்று இங்கிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மெனான உருவெடுத்த அலிஸ்டர் குக் அறிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த 6வது வீரர் அலிஸ்டர் குக். அவருக்கு வயது 33தான் ஆகிறது. ஆனால் பேட்டிங் பார்ம் சீரடையவில்லை, இந்த ஆண்ட் 9 டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 18.62 தான். ஆகவே இதுவே ஓய்வு பெற சரியான தருணம் என்று அவர் முடிவெடுத்து விட்டார். இங்கிலாந்திலேயே அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை குக் படைத்தவர். இதுவரை 160 போட்டிகளில் 12,254 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 44.88. சராசரி 45க்குக் கீழ் இப்போதுதான் இறங்கியுள்ளது. 32 சதங்கள் 52 அரைச்தங்கள், 11 டக்குகள். அதிகபட்ச ஸ்கோர் 294. 2006-ல் நாக்பூர் டெஸ்ட்டில்…

Read More

ஒருபாலுறவில் ஈடுபட்ட மலேசிய பெண்களுக்கு பிரம்படி தண்டனை

ஒருபாலுறவு – பெண்களுக்கு பிரம்படி தண்டனை காரில் ஒருபாலுறவில் ஈடுபட்ட இரண்டு மலேசிய பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கி அந்நாட்டில் உள்ள ஷரியா (மத கோட்பாடுகள் தொடர்புடைய) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெரன்காணு மாகாணத்தில் உள்ள ஷரியா உயர் நீதிமன்றத்தில்  22 மற்றும் 32 வயதுடைய இந்த இரண்டு முஸ்லிம் பெண்களுக்கும் தலா 6 பிரம்படிகள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த மாகாணத்தில் ஒருபால் உறவு தொடர்பாக பொதுவெளியில் வழங்கப்பட்ட முதல் தண்டனை இதுதான் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

Read More

மியான்மாரில் நடந்த மிகக்கடுமையான குற்றம் ரோஹிங்யா-ஐ.நா

கண்மூடித்தனமான படுகொலைகள்; எரிக்கப்பட்ட கிராமங்கள்; கடுமையான தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகள்; கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்கள் – இவைதான் ஐநாவின் புலன் விசாரணையின் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள். மியான்மரில் நடந்தது ”சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பார்க்கும்போது மிகக்கடுமையான குற்றங்கள்” என ஐநா குற்றம் சாட்டியிருக்கிறது. மேற்கு ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா முஸ்லீம்கள் மீது நடந்த இனப்படுகொலை குறித்து ராணுவம் கட்டாயம் விசாரிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மியான்மருக்குள் நுழைந்து விசாரிக்க ஐநாவின் விசாரணை அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்காத நிலையில் இந்த அறிக்கையின் முடிவுகள் வந்துள்ளது. ஆனால் மியன்மர் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது. எப்படி விசாரணை அதிகாரிகள் முடிவுக்கு வந்தார்கள்? கட்டமைத்தல் மியான்மரில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரால் மனித உரிமை மீறல் நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து கடந்த வருடம் மார்ச் 24-ம் தேதி…

Read More

மீண்டும் அண்டார்டிகாவில் டைனோசர்கள்

அண்டார்டிகா என்றதும் உங்கள் மனகண்ணில் என்னவெல்லாம் வரும்? எங்கும் நிறைந்து இருக்கும் பனிப்பாறைகள், உச்சபட்ச குளிர், பயம் தரும் தனிமை – இவைதானே நம் நினைவில் வரும். அண்டார்டிகா குறித்து நம் நினைவில் வரையப்பட்ட சித்திரங்கள் இவைதான். நமக்கு கற்பிக்கப்பட்டவையும் இவைதான். ஆனால், அந்த நிலத்தில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? இப்போது எங்கும் பனிக்கட்டி படர்ந்திருக்கும் அந்த நிலத்தில் ஒரு காலத்தில் காடு இருந்திருக்கிறது. அந்த காட்டில் டைனோசர்கள் உலவி இருக்கின்றன. எப்படி இது சாத்தியம்? குளிர்பிரதேசமாக அறியப்பட்ட ஒரு நிலத்தில் எப்படி வெப்பமும், காடும் இருந்திருக்கும்? ‘கிரிட்டாஸியஸ் காலம்’ இதனை புரிந்துக் கொள்ள நாம் பின்னோக்கி பயணிக்க வேண்டும். நில வரலாற்று காலத்தில் நாம் பின்னோக்கி செல்ல வேண்டும். 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கிரிட்டாஸியஸ் காலம் என அறியப்பட்ட…

Read More

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் முடிந்த பகடை ஆட்டம்: 6 பேர் படுகாயம்; இருவர் கவலைக்கிடம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் பகடை ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தவர்களிடையே ஏற்பட்ட கைகலப்பு துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது. இதில் 6 பேர் படுகாயம்; இருவர் கவலைக்கிடம் எனவும் போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து சான் பெர்னார்டியோ காவல் நிலைய செய்தித் தொடர்பாளர் சாடீ ஆல்பெர்ஸ் தெரிவித்த விவரம்: அடுக்குமாடி வளாகத்தில் நுழைந்த கும்பல் ஒன்று ஞாயிறு இரவு பகடை விளையாட்டு ஆடியதாகக் கூறப்படுகிறது. இதில் ஈடுபட்ட கும்பலுக்குள் ஏதோ குழப்பம் ஏற்பட்டு சண்டையிட்டுக் கொண்டபிறகு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அங்கு போவதற்குள் துப்பாக்கிச்சூடு நடந்துவிட்டது. உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியை அறிய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். பகடை ஆட்டத்திற்கும் துப்பாக்கிச் சூட்டிற்கும் இடையில் நடந்தது என்ன என்பது இப்போது எதுவும் தெரியவில்லை. தீவிர விசாரணைக்குப் பின்னர்தான் தெரியவரும். ஆனால் இச்சம்பவத்தின்…

Read More

இலங்கை நேபாள ஜனாதிபதிகள் சந்திப்பு.

பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கும் இடையிலான உதிதியோகபூர்வ சந்திப்பு நேற்று (01) பிற்பகல் இடம்பெற்றது. நேபாள ஜனாதிபதி மாளிகையான ஷிதல் நிவாஸுக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களை நேபாள ஜனாதிபதி மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஜனாதிபதி அவர்களின் நேபாள விஜயம் தொடர்பாக நன்றி தெரிவித்த நேபாள ஜனாதிபதி, இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார பிணைப்பு மட்டுமன்றி மிக நீண்ட உறவுகள் குறித்து நினைவுகூர்ந்தார். பிம்ஸ்டெக் மாநாட்டின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதையிட்டு ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த நேபாள ஜனாதிபதி, அதன் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்குவதாக குறிப்பிட்டார். இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலா துறைகளில் உறவுகளை பலப்படுத்துவது…

Read More

பெயர்ப்பலகை சேதம் திருத்தியமைக்குமாறு மக்கள் விசனம்

பெயர்ப்பலகை சேதம் திருத்தியமைக்குமாறு மக்கள் விசனம். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைதியசாலைக்கு முன்னால் செல்கின்ற மதரசா  வீதியினுடைய பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டு நீண்ட நாட்களாக கவனிப்பார் இன்றி கிடக்கின்றது இதை சம்மந்தப்பட்டோர்  திருத்தி காட்சிக்கு வைக்குமாறு இவ் வீதியில் வசிக்கும் மக்கள் வேண்டுகின்றனர்.

Read More