காட்சி மாற்றத்திற்கான முன்னோட்டம்

  இந்திய சினிமாவும் நடிப்புத் துறையும் நல்ல பல நடிகர்களை, அரசியலுக்கு கொடுத்திருக்கின்றது. இலங்கையின் அரசியலானது பல அரசியல்வாதிகளை நல்ல நடிகர்களாக உருவாக்கியிருக்கின்றது. உருகி உருகி நடிக்கும் சிவாஜி கணேசன்களும், வில்லத்தனமான நம்பியார்களும், கவுண்டமணி – செந்தில்களும் அதேபோல் ‘அந்நியன்’ வேடம் ஏற்பவர்களும் நமது கதையில் நிறையவே இருக்கக் காண்கின்றோம்;. அந்த வகையில் அடுத்த காட்சி மாற்றத்திற்கான முன்னோட்ட வேலைகள் இப்போது மெல்ல மெல்லத் தொடங்கி இருக்கின்றன. இந்த காட்சி மாற்றத்திற்கு ஆட்சி மாற்றம் என்று பெயர். அதே திரையில் பழைய கதையை புதிய பாணியில், நடிகர்களை மாற்றி, குணச்சித்திர பாத்திரங்களை உட்புகுத்தி, மக்கள் ஆணையைக் கேட்கும் ஒரு தேர்தலின் ஊடாக இது நிகழ்வதற்கான காலம் நெருக்கி வந்துள்ளது. இன்றைய அரசாங்கம் தனது ஆயுட்காலத்தின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது. கடந்த நான்கரை வருடங்களில் பெரிதாக ஒன்றையுமே…

Read More

ஜம்மு காஷ்மீர்: வஞ்சித்த இந்தியாவும் எதிர்காலமும்.

உரிமைப்போராட்டங்கள் காலக்கெடு வைத்து நடாத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள் அவற்றை முன்னயதிலும் வேகமாக முன்தள்ள உந்தும். உரிமைக்கான குரல்கள் ஏன் எழுகின்ற என்பதை அதிகாரம் எப்போதுமே விளங்கிக் கொள்வதில்லை. அதனாலேயே காலப்பொருத்தமற்ற, அபத்தமான அதேவேளை ஆபத்தான முடிவுகளை அது எடுக்கிறது. இவ்வாறான முடிவுகள் பலத்தின் குறியீடல்ல, பலவீனத்தின் குறியீடு. திங்கட்கிழமை இந்திய அரசாங்கம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல்யாப்பு ரீதியாக இருந்து வந்த தன்னாட்சி அதிகாரத்தை ரத்த செய்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு இவ்வதிகாரத்தை வழங்கும் அரசியல்யாப்பின் 370வது சட்டப் பிரிவை இரத்துச் செய்வதாக பா.ஜ.கவின் தலைவரும் உள்துறை அமைச்சருமாகிய அமித் ஷா பாராளுமன்றில் அறிவித்தார். இதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையை குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ளார். நீண்டகாலமாக சுயாட்சிக்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடி வரும் காஷ்மீர் மக்களுக்கு இது புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் ஜம்மு காஷ்மீரில் ஊடரங்குச் சட்டம்…

Read More

காஷ்மீரில் என்ன நடக்கின்றது ?

  காஷ்மீரில் ஏன் இவ்வளவுப் பிரச்னை? அங்கு என்னதான் நடக்கிறது?’ என யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அவர்கள் மிக எளிமையான சில பதில்களை வைத்திருப்பார்கள். 1. காஷ்மீரில் நடப்பது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்னை. முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் சண்டையிடுகிறது. இந்துக்களுக்கு ஆதரவாக இந்தியா சண்டையிடுகிறது. 2. காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அதை மீட்பதற்காக இந்திய ராணுவம் சண்டை நடத்திக்கொண்டிருக்கிறது. 3. முஸ்லிம் தீவிரவாதிகள் காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் சேர்ப்பதற்காக பயங்கரவாதம் செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்ற இந்திய ராணுவம் போராடிக் கொண்டிருக்கிறது… இப்படி வகை, வகையான கதைகள் காஷ்மீர் பற்றி பொதுப்புத்தியில் உலவுகின்றன. (இக்கட்டுரை, 2013-ல், காஷ்மீரிகளின் கல்லெறியும் போராட்டம் உச்சத்தில் இருந்தபொழுது எழுதப்பட்டது. காஷ்மீர் வரலாற்றையும், அரசியல் பின்னணியையும் விளக்கும் ஒரு நெடுங்கட்டுரை) எதுதான் உண்மை? ஊடகங்களும்,…

Read More

கல்முனையின் எல்லையை விட்டுக்கொடுக்க முடியாது.

  கல்முனையில் முஸ்லிம்களின் பிரச்சினை என்ன? முஸ்லிம்கள் உள்ளூராட்சி சபை கேட்கவில்லை; ஏனெனில் அவர்களுக்கு மாநகரசபை இருக்கின்றது. 1946ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு உள்ளூராட்சி சபை இருக்கிறது. கல்முனையில் முஸ்லிம்கள் பிரதேச செயலகம் கேட்கவில்லை. ஏனெனில் 1946ம் ஆண்டு DRO முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு பொதுநிர்வாகக் கட்டமைப்பு இருந்துவருகிறது. அவர்களுக்கென்று 90% முஸ்லிம்களைக்கொண்ட கிழக்குமாகாணத்திலேயே மிகப்பெரும் வர்த்தக கேந்திர நிலையம் இருக்கின்றது. எனவே, கல்முனையில் புதிதாக முஸ்லிம்கள் எதையும் கேட்கவில்லை. இருப்பதை நவீனமயப்படுத்தவேண்டிய தேவை மட்டுமே இருக்கின்றது. இலங்கையிலேயே முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற ஒரேயொரு பெருநகரம் இதுவாகும். இதனால்தான் இது முஸ்லிம்களின் தலைநகரமென்றும் தென்கிழக்கின் முகவெற்றிலை என்றும் அழைக்கப்படுகிறது. பிரச்சினை என்ன? ————————- கல்முனையில் எதுவுமே கேளாத முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் இவ்வளவு பதட்டம்? ஏனெனில் கல்முனையின் ஒரு பிரதான பாகத்தைத் தமிழர்கள் கேட்கிறார்கள். அதுதான்…

Read More

காலனித்துவ நீக்கம்..

  ‘காலனித்துவ நீக்கம்’ என்பது நம்மில் பலருக்குப் பரிச்சயமில்லாத, ஆனால் சுவாரஸ்யமானதொரு கருப்பொருளாகும். கொஞ்சம் பொறுமையாக இறுதிவரை வாசித்து, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். ******************************************* முஸ்லிம் மனதைக் காலனித்துவ நீக்கம் செய்தல் – யூசுஃப் பிராக்ளர் இன்று ‘மூன்றாம் உலகு’ என்றழைக்கப்படும் நிலப்பகுதிகளை ஐரோப்பிய-அமெரிக்க சக்திகள் பலாத்காரமாக பௌதிக ரீதியில் பிடித்துவைத்து, அவற்றின் வளங்களை நம்பவொண்ணா அளவில் சுரண்டிவந்த ஒரு வரலாற்றுக் காலகட்டமே ‘காலனித்துவம்’ என்று பெரும்பாலும் தற்போது புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. மேற்கத்திய சக்திகளின் இந்த அமைப்பு ரீதியான கொள்ளை ஸ்பெயினிலிருந்து துவங்கியது. அந்தலூஸியாவில் இருந்த இஸ்லாமிய ஃகிலாபத்தை அழித்து, அதனிடமிருந்து களவாடிய தங்கத்தையே அமெரிக்க கண்டங்கள் நெடுகிலுமான தனது சாகசங்களில் ஸ்பெயின் முதலீடு செய்தது. (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ‘இஸ்லாமிய கிலாபத்’ என்ற சொல்லாடலைக் காட்டிலும் ‘முஸ்லிம் மன்னராட்சி’ என்பதே இங்கு பொருந்துகிறது).…

Read More

பிணங்களுடன் கிடந்து மீண்ட போராளித் துரோகி.

தன் இனத்தையே அழித்த தமிழர் போராட்டம், மற்ற இனங்கள் மகிழ்ச்சியாக வாழ இடம் தருமா? சிங்கள-முஸ்லிம் இனங்களை பலிதீர்க்க தற்கால முஸ்லிம் சிங்கள இன முறுகல் பின்னணியில் சில புலம்பெயர் தமிழ் சக்திகள் தங்கள் பங்களிப்பை சில இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகவும் வழங்குகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது.   கைதிகள் என்போர் குற்றவாளிகள். அல்லது குற்றத்துக்காக சந்தேகிக்கப்படுவோர். ஆம் இவர்களும் அத்தகைய ஒரு குற்றத்துக்கு உரியவர்களே! அது என்னவென்றால், தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டதுதான்! விடுதலைப் புலிகள் செய்த அதே காரியம் ஏன் அவர்களாலேயே குற்றமாக்கப்படுகிறது என்றால்… அதை விளக்க அவர்களின் பக்கவாத்தியக்காரர்களால் தான் முடியும்! சில படித்த மனிதர்களுக்கு இது மிகச் சுளுவான காரியமாக இருக்கலாம். ஆனால், ஒன்று இங்கு கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் யாவரும் தமிழ் தாயின் புத்திரர்கள், ஒருவேளை இவர்களின் சகோதர சகோதரிகள் யாரும்…

Read More

குறிவைகப்படும் றிசாட் பதியூத்தீன்!

எஸ்.றிபான் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியூதீன் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு சென்று சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் அமைச்சர் றிசாட் பதியூதீனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்று கோரியே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளார்;. இதற்கு எதிர்க்;கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 64 பேர் ஆதரவாக ஒப்பமிட்டுள்ளார்கள். ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலிகளின் பின்னர் அமைச்சர் றிசாட் பதியூதீனை பௌத்த இனவாதிகளும், எதிர்க் கட்சியினரும் குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் செயற்பாடுகள் அரசியல் பின்னணியைக் கொண்டதாக இருக்கின்றது. ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். ஆட்சியை மாற்ற வேண்டும். தாம் ஆட்சிக்கு வர வேண்டுமென்று பல்வேறு…

Read More

சகவாழ்வை நோக்கிய 2019 இன் வெசாக்

கௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம், இறப்பு முதலிய மூன்று முக்கிய நிகழ்வுகளைச் சுட்டி நிற்கும் வெசாக் பண்டிகையானது ஆண்டு தோறும் மே மாத மத்தியில் கொண்டாடப்படுகிற பௌத்தர்களின் ஓர் முக்கிய பண்டிகையாகும். சிங்கள மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையில் இம்முறை வெசாக் பண்டிகையானது சர்வமத குறிப்பாக முஸ்லிம்களின் ஏற்பாடு ரீதியான பங்களிப்புடன் நடந்து முடிந்திருப்பது குறித்து பலரின் கவனமும் இதன் மீது திரும்பியிருப்பது மட்டுமல்லாது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இலங்கை தேசம் காலணித்துவ ஆட்சிக்குள்ளாளாக்கப்படுவதற்கு முன்னரே இந்நாட்டை ஆண்ட சிங்கள ராஜாக்களின் நன்மதிப்பை வென்றதும், அதியுயர் அரச பதவிகளை நம்பகத்தன்மையோடு பொறுப்பாக்கப்பட்டதுமான இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம், இன்று அதே பௌத்தர்களின் ஓர் பண்டிகைக் கொண்டாட்டத்துக்கு உதவியமை குறித்து பெரிதும் சிலாகிக்கப்படுவதில் குறித்த சமூகம் வரலாறு நெடுகிலும் சந்தித்த பெரும் நிந்திப்புகளும்,…

Read More

தேசம் எதிர் நோக்கும் சவாலும், கல்முனை இனவன்முறை தூண்டல் பின்னணியும் !

  மூன்றாம் உலக நாடுகளில் வல்லாதிக்கம் செலுத்தும் பிராந்திய நாடுகளாலும், உலக விழுங்கிகளான மேற்கத்திய நாடுகளாலும், அமெரிக்க, சியோனிச சக்திகளாலும் தீவிரவாதம் என்ற பெயரில் தயாரிக்கப்படுவதே பயங்கரவாதமாகும். 1980 முதல் இந்தியாவின் கூலிகளாக தமிழ் இளைஞர்கள் இருந்தார்கள். தமிழர் தாயகம் என்ற ஆசை உருவாக்கப்பட்டு “ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் தவறென்ன” என்ற கோசத்துடன் மூளைச்சலவை செய்யப்பட்டு, தீவிரவாதிகளாக மாற்றப்பட்டு, பயங்கரவாதிகளாக காட்சிப்படுத்தப்பட்டு அவர்கள் அளிந்ததை தவிர அடைந்தது ஒன்றுமில்லை. தமிழர் போராட்டத்தில் ஒட்டு மொத்த பயனை அடைந்தது இந்தியாதான். ஆயுத விற்பனைமூலம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆதாயம் பெற்றது. கடந்த 30 வாருட பயங்கரவாதத்தின் மூலம் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் என்பன ஸ்திரதன்மையை இழந்தது. 2009ல் மஹிந்த ஆட்சியில் சுமார் 20,000 இராணுவ வீரர்களையும், பல ஆயிரம் பொதுமக்களையும் கொன்று குவித்த தமிழ்…

Read More

பயங்கரவாதமும் முஸ்லிம்களும்.

  சஹாப்தீன் ‘மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதே போனால் பரதேசம் போவேன்’ என்பது போலவே சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் இருக்கின்றன. அவர்களுக்கு இனவாதத்தைத் தவிர வேறு எதனையும் பேசவராது. அதனால்தான், இனவாதம் பேசி சிறுபான்மையினரை சிறுமைப்படுத்தும் காரியங்களை குத்தகைக்கு எடுத்து மூளைக்கும், வாய்க்கும் தொடர்பில்லது பேசி, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டில் ஏற்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னர் ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலரும், எதிர்க் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் மிக மோசமான வகையில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இதனை தவிர வேறு வார்த்தைகளை அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாதுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசுவதில் போட்டி போட்டுக் கொண்டு கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் ஒரு சிறு குழுவினரே சம்பந்தப்பட்டுள்ளார்கள். அதற்காக…

Read More