காஷ்மீரில் என்ன நடக்கின்றது ?

  காஷ்மீரில் ஏன் இவ்வளவுப் பிரச்னை? அங்கு என்னதான் நடக்கிறது?’ என யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அவர்கள் மிக எளிமையான சில பதில்களை வைத்திருப்பார்கள். 1. காஷ்மீரில் நடப்பது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்னை. முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் சண்டையிடுகிறது. இந்துக்களுக்கு ஆதரவாக இந்தியா சண்டையிடுகிறது. 2. காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அதை மீட்பதற்காக இந்திய ராணுவம் சண்டை நடத்திக்கொண்டிருக்கிறது. 3. முஸ்லிம் தீவிரவாதிகள் காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் சேர்ப்பதற்காக பயங்கரவாதம் செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்ற இந்திய ராணுவம் போராடிக் கொண்டிருக்கிறது… இப்படி வகை, வகையான கதைகள் காஷ்மீர் பற்றி பொதுப்புத்தியில் உலவுகின்றன. (இக்கட்டுரை, 2013-ல், காஷ்மீரிகளின் கல்லெறியும் போராட்டம் உச்சத்தில் இருந்தபொழுது எழுதப்பட்டது. காஷ்மீர் வரலாற்றையும், அரசியல் பின்னணியையும் விளக்கும் ஒரு நெடுங்கட்டுரை) எதுதான் உண்மை? ஊடகங்களும்,…

Read More

ஆசிஃபா கொலை வழக்கு : மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை… பதான்கோட் நீதிமன்றம் அதிரடி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது கத்துவா என்ற கிராமம். இங்கு பக்கர்வால் என்ற குதிரை ஓட்டும் இனத்தை சேர்ந்த இஸ்லாமிய பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். ஊருக்குள் ஏற்பட்ட பிரச்சனைக்கு பழி வாங்கும் நோக்காக 8 வயது சிறுமி ஆசிஃபா கோவிலுக்குள் வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். தேசிய அளவில் பெரும் கோபத்தை ஏற்படுத்திய இந்த சம்பத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து தக்க தண்டனைகள் வாங்கித்தர வேண்டும் என்று ஒரு சாரர் குரல் எழுப்ப, மற்றொரு பக்கம் கைது செய்யப்பட்டவர்கள் நிரபாரதிகள், அவர்களை நீங்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏக்கள் உட்பட பலர் சாலையில் போராட்டம் நடத்திய கொடுமைகளும் அரங்கேறின. பதான்கோட் நீதிமன்றத்தில் 7 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி வழக்கின் விசாரணை முடிவுக்கு…

Read More

முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் – ஓ.ஐ.சி கோரிக்கை !

இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள இஸ்லாமிய சர்வதேச கூட்டமைப்பான ஓ.ஐ.சி ,முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுள்ளது. சவூதியில் நடந்த 14 ஆவது தேசிய மாநாட்டில் இது தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. முழு அறிக்கையின் இணைப்பு https://www.oic-oci.org/docdown/?docID=4496&refID=1251

Read More

எல்டீடீயினர் மீதான தடை நீடிப்பு

வளமான தேசங்களைத் துண்டாடும் வகையில் ஆயுதமுனைப் பயங்கரவாதத்தை முன்னெடுத்ததும் உலக பயங்கரவாதப் பட்டியலில் முன்னிலை வகித்ததுமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடித்திருப்பதாக இந்திய மத்திய அரசு நேற்றைய தினம் (14) பிரசுரிப்பொன்றை வெளியிட்டிருந்தது. 1967ம் ஆண்டின் சட்டவிரோத செயற்பாடுகள் மீதான தடைச் சட்டத்தின் அடிப்படையில் நீடிக்கப்பட்டுள்ள மேற்படி தடையானது, குறித்த அமைப்பானதை இந்திய இறைமைக்கு முற்றிலும் முரணான ஒன்று எனவும், கடந்த கால வரலாறுகள் முதற்கொண்டு இற்றைவரை இந்திய அரசின் தேசிய தலைவர்களுக்குப் பாரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்திய வகையில் முதன்மையான பயங்கரவாத அமைப்பு என்பதைக் கருத்தில் கொண்ட வகையிலுமே பிரசுரிக்கப்பட்டுள்ளது.  

Read More

நியுசிலாந்து மஸ்ஜித் படுகொலையின் பின்னர் வெடிகுண்டு.

நியூசிலாந்தின் மஸ்ஜித் அல் நூரில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தீவிரவாதி ப்ரெண்டன் டர்ரன்ட் (Brenton Tarrant) நடத்திய துப்பாக்கிச் சூட்டை டிவிட்டரில் நேரடியாக பதிவு செய்துள்ளான். தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்பு நடத்தப்பட்ட தாக்குதல்களின் பெயர்களை கிறுக்கி வைத்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு பெண் உட்பட நான்கு தீவிரவாதிகளை நியூசிலாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் காரில் வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் இருந்ததை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஸ்ட்ரிக்லாண்ட் (Strcikland) வீதியில் வெடிகுண்டுகளுடன் கார் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். இது குறித்து கமிஷ்னர் புஸ் “எண்ணற்ற IED ரகங்கள் காரில் இருந்துள்ளது. அவைகளை இராணுவ வீரர்கள் செயலிழக்க செய்துள்ளனர்” என்ற குறிப்பிட்டுள்ளார். மஸ்ஜித் உள் கட்டிடம் இரத்த மயமாக காட்சியளிக்கிறது. நேரடி சாட்சிகளின் வாக்குமூலத்தில் “மஸ்ஜித் உள்ளே 5 வயது…

Read More

தமிழகத்தை தலை குனியச் செய்த பொள்ளாச்சி கொடூரம் – துணை போகும் அதிமுக

இவ்வளவு கொடூரமான, அஞ்சி நடுங்கத்தக்க, வெட்கக் கேடான சம்பவம் தமிழகத்தில் நடக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டோம். தினம் தினம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில அரிப்பெடுத்த அயோக்கியர்களால் அவை நிகழ்த்தப்பட்டாலும், பொதுவாக பெண்களிடம் மிக கண்ணியமாக தமிழக ஆண்கள் நடந்து கொள்வார்கள் என்ற பார்வை தான் இருந்தது. ஏற்கெனவே உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு என இந்தியா பெயர் எடுத்திருக்கின்றது. ஆனால் இனி இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற மாநிலம் தமிழ்நாடுதான் என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இன்று தமிழ்நாட்டின் பெயர் சீரழிந்து இருக்கின்றது. பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதற்குத் தகுதியற்ற மாநிலமாக இந்த மானங்கெட்ட குற்றக் கும்பலின் ஆட்சி மாற்றி இருக்கின்றது. எங்கெல்லாம் அதிகார பலமும், பணபலமும் கட்டுக் கடங்காமல் அதிகரிக்கின்றதோ…

Read More

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் மோதல். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜினாமா!

சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற்று அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டதன் எதிரொலியாக, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் இன்று அதிரடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிபர் ட்ரம்பின் நிர்வாகத்தில் வெளியுறவுத்துறை கொள்கைகளை கையாள்வதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவராகவும், மதிக்கப்படுபவருமாக ஜேம்ஸ் மேட்டிஸ் கருதப்பட்டார். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அதிபர் ட்ரம்பின் பலவேறுவிதமான கொள்கைகளுடன் முரண்பட்ட நிலையில் மேட்டிஸ் இருந்துவந்தார். இந்நிலையில், உச்சக்கட்டமாக சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறும் விவகாரத்தில் மேட்டிஸ் தனது ராஜினாமாவை அறிவித்தார். ராஜினாமா கடிதத்தை அதிபர் ட்ரம்பிடம் அளித்தபோதிலும்கூட, அவர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அந்தப் பதவியில் நீடிப்பார். தனது ராஜினாமா கடிதத்தில் அமைச்சர் மேட்டிஸ் கூறுகையில் “ நான் எனது பதவியில் இருந்து விலகுவதற்கு இதுதான் சரியான நேரம் என நினைக்கிறேன்.…

Read More

போப்பத்-எல்ல பிரதேசத்தில் கேபிள் கார்

போப்பத்-எல்ல நீர் வீழ்ச்சி பிரதேசம்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. . இதற்கமைவாக குருவி;ட்ட நகரிலிருந்து போப்பத்-எல்ல வரை கேபிள் கார் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென குருவிட்ட பிரதேச சபை நான்கு மி;ல்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

Read More

யுக்ரேன் – ரஷ்யா மோதல்: பிடிப்பட்டவர்கள் ரஷ்ய தொலைக்காட்சியில் வாக்குமூலம்

ரஷ்யாவால் இணைப்பட்டுள்ள க்ரைமியாவின் கடற்கரை பகுதியில், ரஷ்யாவால் சுடப்பட்டு பின் கைப்பற்றப்பட்ட யுக்ரேன் கப்பல்களில் இருந்தவர்களின் வாக்குமூலத்தை ரஷிய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. பிடிப்பட்டவர்களில் ஒருவரான வொலோயிமிர் லிசோவ்யி, யுக்ரேனின் “ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள்” குறித்து தனக்கு தெரியும் என தெரிவித்துள்ளார். யுக்ரேனின் கடற்படை கமாண்டர் அவர்கள் பொய் கூற வற்புறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். ஞாயிறன்று பிடிப்பட்ட 24 யுக்ரேனியர்களை 60 நாட்கள் காவலில் வைக்குமாறு க்ரைமியாவில் உள்ள நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது மூன்று கடற்படை கப்பல்கள் மற்றும் 23 பணியாளர்களை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து யுக்ரேன் நாடாளுமன்றத்தில் பகுதியில் ஒரு புதிய ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரஷ்யா தாக்குதல் நடத்த சாத்தியமான எல்லை பகுதிகளுக்கு இந்த புதிய 30-சட்டம் பொருந்தும் என்று யுக்ரேன்…

Read More

சீனாவில் கார் தயாரிக்கும் முடிவு: ஜெனரல் மோட்டார்ஸூக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

சீனாவில் கார் தயாரிக்கும் திட்டத்தை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கைவிடாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் இயங்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் கார் தொழிற்சாலைகள் உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நிறுவனத்தின் கார்கள் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே வர்த்தகத்தை விரிவாக்கும் நடவடிக்கையை ஜெனரல் மோட்டார்ஸ் மேற்கொண்டு வருகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியாக மேரி பாரா பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில், செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைளை மேற்கொள்ள உள்ளதாக மேரி பாரா அறிவித்துள்ளார். அதன்படி, அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதன் மூலம் செலவை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்கா, கனடா உட்பட முக்கிய நாடுகளில் 14 ஆயிரத்து 800 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவார்கள் என…

Read More