யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கழுத்தறுத்து கொலை.

யாழ்., பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி  ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கடலிக் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மாணவியை கொலை செய்து விட்டு, கொலையாளி தப்பி சென்றபோது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

Read More

தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது சடலம் நேற்றுமுன்தினம் வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு நீர் சதுப்பிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.  பல்கலைக்கழகத்திலிருந்து கடந்த 9 ம் திகதி வெளியேறிய மாணவன் விடுதிக்கு திரும்பவில்லை என்று சகமாணவர்கள் பொலிஸாருக்கு முறையிட்டிருந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது யாவரும் அறிந்தது.  இது தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவமானது சந்தேகங்களற்ற தற்கொலை என்ற முடிவுக்கு வந்துள்ளதாக மட்டக்களப்புக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைநெட் ற்கு தெரிவித்தார்.  சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாவது:  குறித்த மாணவனுக்கும் சிரேஷ்ட மாணவி ஒருவருக்குமிடையே தகாத தொடர்பு இருந்து வந்துள்ளது. இத்தொடர்பின் நிமிர்த்தம் யோகராஜன் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுத்திக்கு சென்றுள்ளார். இவர் இவ்வாறு தொடர்ந்து சென்று வந்துள்ளாரா என்பது…

Read More

உண்மையில் எது தமிழரின் புதுவருடப் பிறப்பு? தையா? சித்திரையா?

நித்திரையில் இருக்கும் தமிழா!சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டுஅண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததேஅறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்தரணி ஆண்ட தமிழனுக்குதை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! ”  என்ற பாரதிதாசன் வரிகளை படித்த போது “அட என்னா இவரு இப்புடி சொல்லிட்டு போயிட்டாரே…” என்று தான் எண்ணத் தோன்றியது. ஆம் தையா? சித்திரையா? எது தமிழரின் வருடப்பிறப்பு? என்ற கேள்விதான் இந்த எண்ணத்திற்கு காரணம்.  எதுவா இருந்தா என்ன அடுத்து சித்திரை வரப்போகுது கொண்டாடிருவம்.. அப்படியே தை வாரப்போ அதையும் கொண்டாடுவம். நமக்கு பலகாரந்தானே முக்கியம்…” இப்படியாக நினைத்துக் கொண்டே வரிகளை மறந்தேன். இருந்தாலும் இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் ஆர்வம் மட்டும் விலகவில்லை. உண்மையில் எது தமிழரின் புதுவருடப் பிறப்பு? தையா? சித்திரையா?. இந்த விடயத்தை அரசியலாகவும் மாற்றிவிட்டனர். நெடுங்கால பிரச்சார யுத்தமாகவே புத்தாண்டு விடயமும் மாறிப்போய்விட்டது.  அவர்…

Read More

மத்திய கிழக்கில் பதற்ற நிலை – விமானப் பயணப் பாதையில் மாற்றம்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை பயணப் பாதையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு அமைவாக கொழும்பிலிருந்து லண்டன் நகருக்கான விமான பயணப் பாதையிலேயே மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. விமானப் பயணிகளின் பாதுகாப்பு கருதியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் ஈரான் மற்றும் ஈராக் வான் எல்லைகளை தவிர்த்து பயணங்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு இந்த அரசு உத்தரவாதம் துருக்கி அதிகாரிகளிடம் பாதுகாப்பு செயலாளர் உறுதி.

இலங்கையில் இனக்கலவரத்துக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.இலங்கையில் பணிமுடிந்து செல்லும் துருக்கியின் தூதர், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்னவை இன்று -30- சந்தித்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.இந்த சந்திப்பின்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளன.இதன்போது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் முஸ்லிம்கள் ஈடுபடவில்லை என்றும் அவர்கள் அரசாங்கத்துக்கு எப்போதும் ஆதரவு வெளியிட்டு வருவதாகவும் துருக்கியின் தூதுவர் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த கமல் குணரட்ன, திகன, கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் போன்று இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் சம்பவம் எதுவும் இடம்பெற அனுமதிக்கப்படமாட்டாது என்று குறிப்பிட்டார்.

Read More

இரண்டு இந்தியர்களையும் இலங்கையர்களையும் கடற்படை மீட்டுள்ளது.

2019 டிசம்பர் 27 ஆம் திகதி நுவரெலியாவில் உள்ள கிரிகெரி ஏரியில் ‘Jet Ski’ சவாரி செய்யும் போது தண்ணீரில் விழுந்த இரு இந்தியர்களையும் இலங்கையர்களையும் இலங்கை கடற்படை மீட்டுள்ளது. நுவரஎலியாவில் உள்ள கிரிகெரி ஏரியில் விளையாடிக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்ததில் ஒரு இலங்கை நாட்டவரும், இந்திய நாட்டைச் சேர்ந்தவரும் காயமடைந்தனர். கிரிகோரி ஏரியைச் சுற்றி இருந்த இலங்கை கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவில் (4RU) இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழுவால் இந்த இருவரும் பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்ட இந்திய நாட்டவர் நுவரலியவில் வசிக்கும் 20 வயதுடையவராக அடையாளம் காணப்பட்டார்.கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடல் பிராந்தியத்திலும், தீவின் ஆறுகள் மற்றும் தொட்டிகளிலும் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது, இது விபத்துகளால் பாதிக்கப்பட்டும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வண்னம் உள்ளது.

Read More

நுண்நிதி நிறுவனங்கள், கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குறுத்துவதற்கு நடவடிக்கை

நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. மத்திய வங்கி இதற்கான விதிகளை அடக்கிய திருத்தச் சட்டமூலமொன்றை நிதியமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது.  தற்போது பணவைப்பை பொறுப்பேற்கும் நிதி நிறுவனங்களை மாத்திரமே இலங்கை மத்திய வங்கியின் சட்டத்தின் கீழ் ஒழுங்குறுத்த முடியும் என்று வங்கி தெரிவித்துள்ளது.இதன் காரணமாக நுண்நிதி நிறுவனங்கள் அடங்கலாக கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குறுத்தும் நோக்கில் திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தச் சட்டமூலத்தை நிதியமைச்சு, அமைச்சரவையில் சமர்ப்பித்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர், இது நடைமுறைக்கு வரும் என்று இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Read More

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, வவுச்சர், பாடப் புத்தகங்கள்.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, வவுச்சர் மற்றும் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 3ஆம் திகதி நிறைவு செய்யப்படவிருப்பதாக கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.வலய மட்டத்தின் அடிப்படையில் பாடப்புத்தக்கங்கள் தற்சமயம் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

Read More

தொடரும் ஜனாதிபதியின் திடீர் கண்காணிப்பு விஜயம்.

சேவையை பெற்றுக்கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வருகை தருகின்ற எந்தவொருவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காது உடனடியாக சரியான மற்றும் வினைத்திறனான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து அரச ஊழியர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அதேநேரம் சேவைகளை வழங்கும்போது எந்தவிதமான முறைகேடுகளும் இடம் பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். நேற்று முன்தினம் (டிசம்பர், 26) பிற்பகல் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திற்குச் சொந்தமான வேரஹெர அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டபோதே ஜனாதிபதி; மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

டெங்கு நுளம்பை ஒழிக்கும் வொல் பெக்கியா வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் முன்னெடுப்பு.

டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கான உத்தேச திட்டம் ஒன்றாக வொல் பெக்கியா (Wolbachia)என்ற பக்ரீரியாவை டெங்கு நுளம்பில் உட்புகுத்தும் புதிய வேலைத்திட்டம் அடுத்த வருட ஆரம்ப காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 2 சுகாதார வைத்திய பிரிவுகளை தெரிவு செய்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நுகேகொட சுகாதார வைத்திய அதிகார பிரிவிலும் கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள டி1 என்ற பிரிவிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஜனவரி மாதம் முதல் இது முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். அவுஸ்ரேலியாவில் மொனெஷ் (Monash University) பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கு அமைவாக இந்த நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் உலகில் 12 நாடுகளில் முன்னெடுக்கப்படுகிறது. இது 2023 ஆம் ஆண்டளிவல் உலகில்…

Read More