கத்தாரில் வீசா மோசடியில் ஈடுபட்ட 9 பேர் அடங்கிய கும்பல் அதிரடிக் கைது!

கத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 9 பேர் அடங்கிய கும்பலை கத்தார் உள்துறை அமைச்சின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தேடல் மற்றும் பின்தொடர்தல் திணைக்கள அதிகாரிகள் கத்தார் முழுதும் போலிக் கம்பனிகளின் பெயரில் வீசா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றது. அந்த வரிசையில் வீசாக்களை விற்பனை செய்து வந்த 9 பேர் கொண்ட கும்பல் சிக்கியுள்ளது. இவர்களில் ஆபிரிக்க நாட்டவர்களும், இலங்கையை சேர்ந்த நால்வரும் உள்ளடங்குகின்றனர். வீசா தொடர்பான விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் இந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்களுடன் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் முத்திரைகள், அடையாள அட்டைகள், வங்கி அட்டைகள், மற்றும் பெருந்தொகையான பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்ற விழா எதிர்வரும் 25 ஆம் திகதி

நானிலம் போற்றும் நாஹூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை மாநகர மக்களால் நடாத்தப்படும் 198 வது வருட புனித கொடியேற்று விழா எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் நடைபெற உள்ளது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் S.M.A அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள இவ் விழாவின் கடைகள் ஏலம் எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.       கொடியேற்று தினமான சனிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனித கொடியானது…

Read More

சட்ட விரோத கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலாளரிடம் ஊடகவியலாளர் கேள்வி.

சட்ட விரோத கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலாளரிடம் ஊடகவியலாளர் கேள்வி   அரசாங்கத் தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஊடக செயலமர்வு மற்றும்  மாவட்ட ஊடாகப்பிரிவு அலுவலகத் திறப்பு  விழாவும் அண்மையில் (06) மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.  இந் நிகழ்வில், அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவௌ, அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க, மேலதிக அரசாங்க அதிபர்களான வி.ஜெகதீசன், ஏ.எம்.அப்துல் லத்தீப்  மற்றும் திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டு மாவட்ட ஊடாகப்பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் அரசாங்க அதிபர் உரையாற்றும் போது,அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மாவட்ட செயலகத்தின் கடமையும் பொறுப்புமாகும். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் தகவல்களை…

Read More

கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் பதவி நீக்கப்பட்டார்!

கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கனேஷ் மற்றும் மாநகர சபை உறுப்பினர் சுமித்ரா ஜெகதீசன் ஆகிய தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் இருவரும் மாநகர சபை உறுப்புரிமையை இழந்துள்ளனர். இதற்க்கான வர்த்தமாணி அறிவித்தலை அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திலின விக்கிரமரத்ன வெளியிட்டுள்ளார், இவர்கள் இருவரும் கட்சி உறுப்புரிமையை இழந்திருப்பதனால் கல்முனை மாநகர சபையின் உறுபினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இவர்களது பதவி நீக்கம் பற்றி கல்முனை மாநகர மேயர் மற்றும் ஆணையாளருக்கு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேற்படி வர்த்தமானி அறிவித்தல் இணைக்கப்பட்ட கடிதம் மூலம் அறிவித்துள்ளார். கடந்த 2018 யில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் இவ் இருவரும் போட்டியிட்டு தோல்வியுற்ற போதும் அக் கட்சிக்கு கிடைத்த நியமன பட்டியல் மூலம் மாநகர…

Read More

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட நூலகத்திற்கு மாகாண மட்ட விருது, முதல்வர் பாராட்டு !

தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான பொது நூலகங்களின் பாதுகாப்பு பேணல் தொடர்பான ஆய்வுப் போட்டியில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பொது நூலகம் கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக கிடைக்கப்பெற்ற சான்றிதழ் மற்றும் விருது என்பவற்றை சாய்ந்தமருது நூலகர் ஏ.சி.அன்வர் சதாத், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிடம் கையளித்தார். கல்முனை மாநகர சபையின் முதல்வர் செயலக கேப்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி ஆணையாளர் எம்.ஐ.பிர்னாஸும் பங்கேற்றிருந்தார். இவ்விருதானது கல்முனை மாநகர சபைக்கும் சாய்ந்தமருது மண்ணுக்கும் பெருமையைத் தேடித்தந்திருப்பதாக இதன்போது மகிழ்ச்சி தெரிவித்த மாநகர முதல்வர் றகீப் அவர்கள், இதற்காக இந்நூலகத்தில் சிறப்பாக பணியாற்றி வருகின்ற நூலகர், உதவி நூலகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாநகர சபையின் சார்பில் பாராட்டைத்…

Read More

சுனாமி பேரலை – உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக மத வழிபாடுகள் இடம்பெற்றன.

நாட்டின் பல பிரதேசங்களில் சுனாமி கடற் பேரலையினால் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக மத நிகழ்வுக் இடம்பெற்றன. கடந்த 2004 ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்த உறவினர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு உறவுகளால் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. பிரதான சமய நிகழ்வு ஹிக்கடுவவில் உள்ள தெல்வத்த சுனாமி நினைவு தூபிக்கு அருகில் நடைபெற்றது. இந் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரச அதிகாரிகள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதேவேளை காலை 9.25 இல் இருந்து இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சுனாமி அனர்தத்தில் சிக்குண்ட ரெயிலில் பயணித்தவர்களை நினைவு கூரும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட குறித்த ரெயில் இன்று காலை தெல்வத்த பிரதேசத்தை நோக்கி பயணித்தது. யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் முற்பகல் 9.35…

Read More

புலிகள் மீள் உருவாக்கம் – கல்முனையில் புலி உறுப்பினர் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கல்முனையில்  நேற்று விசேட அதிரடிப்படையால் ஒருவர் கைதானார். 41 வயதான திலிநாதன் ஆனந்தராஜ் எனும் நபரே மேற்படி கல்முனை நற்பிட்டிமுனையில் கைது செய்யப்பட்டுள்ளார். புலிகளின் அடையாள அட்டைகளை தயாரிப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Read More

ஜம்மு காஷ்மீர்: வஞ்சித்த இந்தியாவும் எதிர்காலமும்.

உரிமைப்போராட்டங்கள் காலக்கெடு வைத்து நடாத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள் அவற்றை முன்னயதிலும் வேகமாக முன்தள்ள உந்தும். உரிமைக்கான குரல்கள் ஏன் எழுகின்ற என்பதை அதிகாரம் எப்போதுமே விளங்கிக் கொள்வதில்லை. அதனாலேயே காலப்பொருத்தமற்ற, அபத்தமான அதேவேளை ஆபத்தான முடிவுகளை அது எடுக்கிறது. இவ்வாறான முடிவுகள் பலத்தின் குறியீடல்ல, பலவீனத்தின் குறியீடு. திங்கட்கிழமை இந்திய அரசாங்கம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல்யாப்பு ரீதியாக இருந்து வந்த தன்னாட்சி அதிகாரத்தை ரத்த செய்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு இவ்வதிகாரத்தை வழங்கும் அரசியல்யாப்பின் 370வது சட்டப் பிரிவை இரத்துச் செய்வதாக பா.ஜ.கவின் தலைவரும் உள்துறை அமைச்சருமாகிய அமித் ஷா பாராளுமன்றில் அறிவித்தார். இதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையை குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ளார். நீண்டகாலமாக சுயாட்சிக்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடி வரும் காஷ்மீர் மக்களுக்கு இது புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் ஜம்மு காஷ்மீரில் ஊடரங்குச் சட்டம்…

Read More

கல்முனையின் எல்லையை விட்டுக்கொடுக்க முடியாது.

  கல்முனையில் முஸ்லிம்களின் பிரச்சினை என்ன? முஸ்லிம்கள் உள்ளூராட்சி சபை கேட்கவில்லை; ஏனெனில் அவர்களுக்கு மாநகரசபை இருக்கின்றது. 1946ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு உள்ளூராட்சி சபை இருக்கிறது. கல்முனையில் முஸ்லிம்கள் பிரதேச செயலகம் கேட்கவில்லை. ஏனெனில் 1946ம் ஆண்டு DRO முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு பொதுநிர்வாகக் கட்டமைப்பு இருந்துவருகிறது. அவர்களுக்கென்று 90% முஸ்லிம்களைக்கொண்ட கிழக்குமாகாணத்திலேயே மிகப்பெரும் வர்த்தக கேந்திர நிலையம் இருக்கின்றது. எனவே, கல்முனையில் புதிதாக முஸ்லிம்கள் எதையும் கேட்கவில்லை. இருப்பதை நவீனமயப்படுத்தவேண்டிய தேவை மட்டுமே இருக்கின்றது. இலங்கையிலேயே முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற ஒரேயொரு பெருநகரம் இதுவாகும். இதனால்தான் இது முஸ்லிம்களின் தலைநகரமென்றும் தென்கிழக்கின் முகவெற்றிலை என்றும் அழைக்கப்படுகிறது. பிரச்சினை என்ன? ————————- கல்முனையில் எதுவுமே கேளாத முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் இவ்வளவு பதட்டம்? ஏனெனில் கல்முனையின் ஒரு பிரதான பாகத்தைத் தமிழர்கள் கேட்கிறார்கள். அதுதான்…

Read More