தோனி இந்திய அணியில் இடம் பிடித்தாலும், இனி ரிஷப் பந்த் தான்…

மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் தோனி அணியில் இடம்பெறமாட்டார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியோடு வெளிவந்தபின் வீரர்கள் குறித்தும், இந்திய அணியின் வெற்றி, தோல்விகள் குறித்தும் நடைபெறும் விவாதங்களில் பிரதானமாக இருப்பது தோனியின் ஓய்வு குறித்து எழுப்பப்படும் கேள்விகள் தான். தோனியோ, அணி நிர்வாகமோ அதிகாரபூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கிரிக்கெட் பேச்சுகள் அனைத்தும் இதை ஒட்டியே அமைந்துள்ளன. இந்திய அணி ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தோனிக்குப் பதிலாக ரிஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அணி…

Read More

செரீனா வில்லியம்ஸ் மார்பக புற்றுநோய் குறித்து வெளியிட்ட காணொளி வைரலாகிறது

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 1990ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிவினில்ஸ் என்ற இசைக்குழுவால் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்டு உலகளவில் பிரபலமான “ஐ டச் மைசெல்ஃப்” என்று தொடங்கும் பாடலை தனது மார்பகங்களை கையால் மறைத்துக்கொண்டு செரீனா வில்லியம்ஸ் பாடும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது. “இனம், நிறம் என எவ்வித வேறுபாடுமின்றி உலகம் முழுவதுமுள்ள பெண்களை பாதிக்கும் பிரச்சனைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் என்னுடைய எல்லையை மீறி இந்த…

Read More

இலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது. இலங்கை அணியுடன் 3 ரெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு ருவன்ரி ருவன்ரி போட்டியிலும் இந்த அணி விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான பயிற்சிப் போட்டி எதிர்வரும் 5ம், 6ம் திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்.   1வது ஒருநாள் போட்டி எதிர்வரும் 10ம் திகதி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.

Read More

பாகிஸ்தானை வெளியேற்றியது வங்காலதேசம்

அபுதாபியில் நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று கடைசி போட்டியில் வங்கதேசத்திடம் தோற்று பாகிஸ்தான் வீட்டை நோக்கி நடையைக் கட்டியது. நாணய சுழர்ச்சியில் வென்று துடுப்பெடுத்த வங்கதேச அணி 12/3 என்ற நிலையிலிருந்து மொகமது மிதுன் (60), முஷ்பிகுர் ரஹிம் (99) ஆகியோரது அற்புதமான 144 ன்கூட்டணியில் முனைப்புடன் அணியை நிலைப்படுத்த 48.5 ஓவர்களில் 239 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இது வெற்றிக்கான இலக்கு இல்லைதான், ஆனாலும் வெற்றிபெற முடியாததை வெற்றிக்கான இலக்காக மாற்றுவதில்தான் ஓர் அணியின் திறமையும் முனைப்பும் உள்ளது, அந்த வகையில் வங்கதேசம் அபாரமான களத்தடுப்பு, காற்றுப்புகா இறுக்கமான பந்துவீச்சு ஆகியவை மூலம் பாகிஸ்தானை 202/9 என்று வெளியேற்றி இறுதியில் இந்திய அணியைச் சந்திக்கிறது. இந்தத் தொடர் முழுதுமே களத்தடுப்பு படுமோசமாக அமைந்தது பாகிஸ்தானுக்கு, கரண்டியில் சாப்பிட்டாலும் கையில் சாப்பிட்டாலும் உணவு…

Read More

கல்முனை தேசிய இளைஞர் விளையாட்டு கழகம் வரலாற்று சாதனை படைத்தது

30வது தேசிய இளைஞர் உதைப்பந்தாட்ட போட்டியில் அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கல்முனை பிரதேச தேசிய இளைஞர் விளையாட்டு கழகத்தினர் வெற்றிபெற்றனர். நேற்று(23) பதுளை வின்சென்ட் டேஸ் மைதானத்தில் நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் காலி மாவட்ட இளைஞர் அணியுடன் மோதி இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இறுதிப்போட்டி அடுத்த மாதம் மாத்தறையில் நடைபெற இருக்கும்  தேசிய விளையாட்டு போட்டியில் நடைபெறவுள்ளது மேலும்  30 வது தேசிய இளைஞர் உதைப்பந்தாட்டபோட்டியில் அம்பாறை மாவட்ட அணி இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவையாகும்.கடந்த 2016 ஆண்டு அம்பாறை மாவட்ட இளைஞர் அணி மூன்றாம் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Read More

ஆசியக்கோப்பை தோல்விக்கு நான் ‘பலிகடாவா?’- நீங்கள் விரும்பினால் ஓய்வு பெறுகிறேன்: ஆஞ்சேலோ மேத்யூஸ் உருக்கமான கடிதம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் படுதோல்வியடைந்து லீக் சுற்றிலேயே வெளியேறியதையடுத்து மேத்யூஸ் கேப்டன் பதவியைப் பறித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். சந்திமால் இவருக்குப் பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். “குறைபாடுகளுக்கு பொறுப்பு ஏற்கிறேன். ஆனால் இதற்கு ஏதோ நான் மட்டுமே காரணம் என்பது போல் காட்டுவது எனக்கு துரோகம் செய்வது போல் உணர்கிறேன். அனைத்து முடிவுகளையும் நான் அணித்தேர்வாளர்கள் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஆகியோருடன் பரஸ்பர புரிதலின் பேரில்தான் எடுத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். தேர்வாளர்களும் பயிற்சியாளரும் நான் ஒருநாள் கிரிக்கெட், டி20 போட்டிகளுக்கு லாயக்கில்லை என்ற அபிப்ராயம் கொண்டிருந்தால் நான் சுமையாக இருக்க விரும்பவில்லை, இந்த இரண்டு வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதை பரிசீலிக்கிறேன். ஜூலை 2017-ல் நான் அனைத்து வடிவங்களிலிருந்தும் கேப்டன்சி பதவியைத் துறந்தேன் என்பதை நீங்கள் நினைவுகூரலாம். 5 ஆண்டுகள் இலங்கை அணியை வழிநடத்தினோம். இந்தக் காலக்கட்டத்தில்…

Read More

சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் விளையாட்டுத்துறை அமைச்சரினால் நிராகரிப்பு

விளையாட்;டு;ப் போட்டிகளில் ஏற்படும் தோல்விகள் குறித்து சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மாகாண சபை உள்ளுராடசி மன்ற மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா முற்றாக மறுத்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்தி வைக்கப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஏற்;படும் வெற்றிஇ தோல்விகள் அனைத்துக்கும் தாம் பொறுப்புக் கூறுவதாகவும் அமைச்சர் கூறினார்.. கிரிக்கட் விளையாட்டில் ஏற்படும் வெற்றி தோல்விகள் அனைத்துக்கும் தாம் பொறுப்புக் கூறுவதாகவும் அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்தார்.

Read More

ஜெயசூர்யா, டிசில்வா, முரளிதரன்… இந்தியாவை ஓட ஓட விரட்டிய இலங்கையா இது?!

1996… கொல்கத்தாவில் நடந்த அந்த உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாருமே மறந்திருக்க முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அன்று அழவைத்தது ஒரு குட்டித் தீவின் கிரிக்கெட் அணி. இலங்கையின் எழுச்சி கிரிக்கெட்டில் அந்த நாளிலிருந்துதான் ஆரம்பித்தது. ஜெயசூர்யா என்னும் ஸ்டார் வானத்துக்கு வந்தது! அந்த நாள் மார்ச் 13,1996… கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இலங்கையும் இந்தியாவும் அரை இறுதிப்போட்டியில் மோதின. டாஸ் வென்ற இந்தியாவின் கேப்டன் முகமது அசாருதின் இலங்கையை முதலில் பேட் செய்ய அழைத்தார். எல்லாம் நல்லபடியாகத்தான் ஆரம்பித்தது. ஜவகல் ஶ்ரீநாத் வீசிய முதல் ஓவரிலேயே ஜெயசூர்யா, கலுவித்தரானா என இருவருமே அவுட். 35 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது இலங்கை. ஆனால் அதன்பிறகு வந்தார்கள் அரவிந்த டி சில்வாவும், மஹானமாவும். இருவரும் மாறி மாறி ரன்கள் அடிக்க, இலங்கை 50…

Read More

நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இலங்கை அணி

எதிர்வரும் செப்டெம்பர் 15 உடன் துபாயில் துவங்கவிருக்கும் 50 ஓவர்கள் கொண்ட ஆசிய கிண்ண தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவிருக்கும் இலங்கை அணி பாரிய நெருக்கடிக்குள் உள்ளாகியிருக்கின்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற முன் போட்டிப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் சகலதுறை ஆட்டக்காரருமான தனுஷ்க குணதிலக்கவுக்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக குழாமிலிருந்து உடனடியாக நீங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் இவருக்கு பகரமாக ஷெஹான் ஜயசூரியவும் இணைக்கப்பட்டுள்ளார். இதேவேளை ஒரு வருட காலமாக எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் பங்குகொள்ளாத லசித் மாலிங்க இணைக்கப்பட்டிருப்பது இலங்கை அணிக்கு ஒரு பலமாக இருந்த போதிலும் சென்ற வாரம் இதே போன்றதொரு பயிற்சியின் போது அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமாலுக்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரும் குழாமிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றமையே இலங்கை…

Read More

நாளை காலியில் இந்திய – இலங்கை மகளிர் கிரிக்கெட் போட்டி

சுற்றுலா இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை காலி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியும் எதிர்வரும் 13ம் திகதி இந்த மைதானத்தில் இடம்பெறவுள்ளது. மூன்றாவது போட்டி எதிர்வரும் 16ம் திகதி கட்டுநாயக்க மேரியன்ஸ் மைதானத்தில் நடைபெறும். மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரப்படுத்தலுக்கு அமைய இந்திய அணி 4வது இடத்தில் உள்ள அதேவேளை இலங்கை அணி எட்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிட்த்தக்கது..

Read More