முஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம்

நான் முஸ்லிம் ஆஃப்கானிஸ்தானில் வளர்ந்தவன் என்பதால் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பள்ளிக்குழந்தைகள் வழக்கமாகக் கேட்கும் உலக வரலாற்றுக்கு மாறான கதையாடலைக் கொண்ட ஒரு உலக வரலாற்றுக்கு நான் ஆரம்ப காலத்திலேயே அறிமுகப்படுத்தப் பட்டேன். அந்நேரத்தில் அது என் சிந்தனையை அவ்வளவாக உருவமைக்கவில்லை. ஏனெனில், அப்பொழுது நான் வரலாற்றை வெறும் மனமகிழ்ச்சிக்காகத்தான் படித்தேன். மேலும் ஃபார்சியிலும் அயர்ச்சியூட்டும் பாடப்புத்தகங்களைத் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை. எனது வாசிப்பு மட்டத்துக்குத் தகுந்த நல்ல ஆக்கங்கள் ஆங்கிலத்தில்தான் கிடைத்தன. வி. வி. ஹில்யர் என்பவர் எழுதிய Child’s History of the World என்ற மிகவும் சுவாரசியமான புத்தகமே எனது ஆரம்பகாலத்தின் விருப்பத்துக்குரிய புத்தகமாக இருந்தது. நிறைய ஆண்டுகள் கழித்து, வளர்ந்ததன் பின் அதைத் திரும்பப் படிக்கும் பொழுதுதான் அதன் ஐரோப்பியமையவாதத் தன்மையும், மிக யதார்த்தமான அதன் இனவெறியையும் கண்டு நான் அதிர்ச்சியுற்றேன்.…

Read More