கல்யாணக் காய்ச்சல்.

ஊர் முழுக்கத் தேடியும் அவனுக்கேற்ற பெண் கிடைக்கவேயில்லை என்ற போதுதான் முன் வீட்டுப் பெண் தேவதையாய்த் தெரிந்தாள். வெள்ள சுள்ளிப் பெண் வேண்டும், படித்திருக்க வேண்டும், குழந்தைகளுக்கு இங்கிலிஸ் சொல்லிக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும் ,ஆனால் வேலைக்குப் போகும் பெண்ணாக இருக்கக் கூடாது, அந்த ஏரியாவாக இருக்கவே கூடாது, இந்த ஸ்கூலில் படித்திருக்கக் கூடாது, பொண்ணுக்கு காக்கா ராத்தாமார் இருக்கவே கூடாது, இப்படி ஆயிரத்தெட்டு கண்டிசன்ஸ் அப்ளையோடு பெண் பிடிக்கும் வேட்டையில் இறங்கியிருந்தார்கள் குடும்பத்தார். குறிப்பாக ராத்தாமார். பெண்கள் வராமலில்லை, பள்ளிப்பருவத்தில் இவன் கண்டு வியந்த சில அழகிகளைக் கூட கண்டிசன்களால் தவறவிட்டான். அதையும் தாண்டி ஏதாவது சிக்கும். சரி இதை ஓகே பண்ணி பேச்சிலர் வாழ்க்கைக்கு மணி அடிப்போம் எனப்பார்த்தால். எங்கிருந்தோ ஒரு கோல் வரும். “சேர், ப்ரோ, மாசர், தம்பி அந்தப் புள்ளயும் நானும்…

Read More