காலனித்துவ நீக்கம்..

  ‘காலனித்துவ நீக்கம்’ என்பது நம்மில் பலருக்குப் பரிச்சயமில்லாத, ஆனால் சுவாரஸ்யமானதொரு கருப்பொருளாகும். கொஞ்சம் பொறுமையாக இறுதிவரை வாசித்து, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். ******************************************* முஸ்லிம் மனதைக் காலனித்துவ நீக்கம் செய்தல் – யூசுஃப் பிராக்ளர் இன்று ‘மூன்றாம் உலகு’ என்றழைக்கப்படும் நிலப்பகுதிகளை ஐரோப்பிய-அமெரிக்க சக்திகள் பலாத்காரமாக பௌதிக ரீதியில் பிடித்துவைத்து, அவற்றின் வளங்களை நம்பவொண்ணா அளவில் சுரண்டிவந்த ஒரு வரலாற்றுக் காலகட்டமே ‘காலனித்துவம்’ என்று பெரும்பாலும் தற்போது புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. மேற்கத்திய சக்திகளின் இந்த அமைப்பு ரீதியான கொள்ளை ஸ்பெயினிலிருந்து துவங்கியது. அந்தலூஸியாவில் இருந்த இஸ்லாமிய ஃகிலாபத்தை அழித்து, அதனிடமிருந்து களவாடிய தங்கத்தையே அமெரிக்க கண்டங்கள் நெடுகிலுமான தனது சாகசங்களில் ஸ்பெயின் முதலீடு செய்தது. (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ‘இஸ்லாமிய கிலாபத்’ என்ற சொல்லாடலைக் காட்டிலும் ‘முஸ்லிம் மன்னராட்சி’ என்பதே இங்கு பொருந்துகிறது).…

Read More

மறவொன்னா மாவீரர் நினைவுகள்.

மாவீரர் நினைவுகள் =================== உங்கள் போராட்டம் நியாயமானதே உங்களுக்கும் அவர்களுக்குள்ளும் நாங்கள் நீதமானவர்களே உங்களுக்குள் எரிந்த விடுதலைத் தீக் கிடங்குகளில் நாங்கள் குளிர் காய்ந்த கதைகள் உங்கள் கற்பனைகளே ..! எங்கள் வீடுகளுக்குள் புலிக்குட்டிகள் புகலிடம் இருந்த கதைகள் ஏராளம் உண்டு உங்கள் புலிப்படையில் அரபுப் பெயர் கொண்ட சிங்கங்கள் அமரகாவியம் அடைந்ததை திரித்துக் கூறும் கதைகளும் அறிவோம் மொழிக்குள் சிறையெடுத்து இனத்தைப் பயன்படுத்தி அடையாளம் துடைத்தெறிந்த பொன்னம்பலக் கதை முதல் போராட்டம் என்ற பெயரில் புறமுதுகில் குத்திய கொடூரங்களும் நாமறிவோம் எங்களைத் துடைத்தெறிய எவரோடும் கூட்டுச் சேரும் உங்கள் அரசியலின் பொல்லாத போக்கினை இராமநாத வேளாள முகத்தினிலே வெள்ளைக்காரி எலிசபத் என்பவரின் பக்கிங்ஹாமில் பார்த்தவர்கள் அப்பு..! எல்லாக் கேள்விக்கும் பதில்கள் உண்டு விடைகள் இல்லாத கேள்விகளும் உண்டு எங்கள் கேள்விக்கு என்ன விடை சொல்லுங்கள் …?…

Read More

மாயக்கல்லி மலையும் புத்தரின் புனிதமும்!

இன்னும் வற்றாமல் ஓடும் சாவாறு, பேராறு, கப்பாறு சாட்சியாக அந்த மாயக்கல்லி மலையின் மீது சத்தியமாக இது எங்களின் நிலம் அந்த மலையில் ஏறி விளையாடிய எங்கள் கால்களின் தடம் வரலாறாகிப் பதிந்திருக்கிறது அந்த மலையடியில் கழித்துவிட்டும் பேராற்றில் குளித்துவிட்டும் நின்ற ஈரம் இன்னும் காயவில்லை நேற்று திடீரெனப் புத்தர் தோன்றி அந்த மலையைப் பிடுங்கி எங்கள் நிலத்தில் ஓங்கி அடித்தது போன்று நாங்கள் மண்ணைச் சுமந்து நிற்கின்றோம் எங்கள் நிலத்தைச் சுற்றி வாழும் பௌத்த உறவுகளோடுதானே நாங்கள் நட்போடும் அன்போடும் விடிந்த பொழுது இருட்டும்வரை ஒன்றெனக் கலந்து வாழ்கின்றோம் எல்லாம் மறந்தீர்கள் நாங்கள் உங்களோடு கலந்து மகிழ்ந்த பொஷன் விழாக்களை மறந்தீர்கள் எங்கள் பெருநாட்களில் நட்பாக நாங்கள் நீட்டும் பலகாரங்களின் பாசத்தையும் மறந்தீர்கள் இன்னும் எங்கள் வயல்களில் விளைந்த நெல்லில் உங்கள் வீட்டில் சோறு புழுங்குவதையும்…

Read More

ஓ சமூகம் !

உனக்காக நான் இல்லை எனக்காக நீயும் இல்லை நமக்காக நாம் ! சமூகம் என்றால் யார் ? நீயா இல்லை நானா ? நீயும் இல்லை நானும் இல்லை நாமே சமூகம் ! நீயில்லாத நானும் நானில்லாத நீயும் ஒரு போதும் சமூகமாகாது ! என்னை விட்ட நீயும் உன்னை விட்ட நானும் சமூகம் என்பது பொய்தானே ! சமுகம் ஊனம் என்றால் நீயும் நானும் சுகதேகி என்பதும் பொய்தானே ! என் பாதை வேறு உன் பாதை வேறு சேரும் இடம் ஒன்றேதான் ! எனதும் உனதும் சிந்தனை முகாம்கள் வெவ்வேறானவை ! நான் தீ சுடும் என்றேன் நீயோ சுட்டால்தான் ஏற்பேன் என்று இன்னும் அழும் பிள்ளையாய் அடம் பிடிக்கிறாய் பட்டவன் நான் சொல்லி ஏற்க மறுக்கிறாய் நீ தொட்டு விடக்கூடாது தீ சுட்டு…

Read More

அக்கினி குஞ்சுகள்

அக்கினி முட்டைகளை அடைகாக்கும் அண்டங் காக்கைகளே ! சிறு பொறி கூட பெரும் தணலாகும் அக்கினி குஞ்சுகள் சிறகு விரிக்கும் அண்டங் காக்கைகள் அணலில் புழுவாகும் அதுவே அதர்மத்தை அரிக்கும் அவதாரம். சத்தியம் சற்று ஓய்வெடுக்கும் ஆனால் நிச்சயம் ஒரு நாள் பலி எடுக்கும். தங்கம் தீயில் குளிப்பதனால் தரமாய் மீண்டும் உயிர் எடுக்கும் தகடுகள் வீணே நெருப்பமிலத்தில் குதிப்பதினால் முகவரி இழந்து மூர்ச்சை அடையும் தானே விதைத்தது வீணே அழியும் தர்மம் நீதியின் தலைகாக்கும் !

Read More

2000 ஆண்டுகள் மண்ணில் புதைந்திருந்த ரோமப் பேரரசின் கிராமம்

நெதர்லாந்தில் உள்ள காட்விஜ்க் எனும் நகரில் 2000 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த பண்டைய ரோமப் பேரரசின் கிராமம் ஒன்றின் எச்சங்களையும், அப்போது பயன்படுத்தப்பட்ட சாலை ஒன்றின் ஒரு பகுதியையும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பண்டைய ரோமப் பேரரசின் வடக்கு எல்லையாக இந்தப் பகுதி இருந்தது. வால்கென்பர்க் புறநகர்ப் பகுதி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்தப் பழங்கால சாலை 125 மீட்டர் நீளமுள்ளது. அந்த பழங்கால கிராமத்தில் ஒரு கால்வாயும் மயானமும் இருந்த சுவடுகள் முழுமையாக உள்ளதாக ஒம்ரோப் வெஸ்ட் எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. காட்விஜ்க் நகரத்தின் வழியாகப் பாய்ந்தோடும் ஓல்டு ரைன் நதியின் கரையோரத்தில் ரோமப் பேரரசர் கிளாடியஸ் லக்டுனம் படாவோரம் எனும் நகரைக் கட்டமைத்தார். அங்கிருந்து நதி வழியாக கப்பல்கள் பிரிட்டனுக்குச் சென்றுள்ளன. பண்டைய ரோமப் பேரரசின் ஒரு கிராமம் அதிகம் சிதையாமல் அப்படியே கிடைக்கும்…

Read More

பரீட்சன்வியந்த விடுதலை விசும்பல்

  விடியலைத் தேடிடும் விட்டில் பூச்சிகள்! ========================== விடியல் என நினைத்து விளக்கில் விழுந்தும் விடியலைத் தேடும் விட்டில் பூச்சிகள் நிச்சயம் ஓர் நாள் இலட்சிம் வெல்லும் வேத வாக்கிய மூளைச் சலவை விடியலை காணாத போதும் விடியல் என நினைத்து விடிந்தும் இருளில் மீழா வரம் வேண்டி விரதம் இருக்கும் விட்டில் பூச்சிகள் நிச்சயம் ஓர் நாள் இலட்சியம் வெல்லும் வேத வாக்கிய மூளைச் சலவை விளக்கினை நோக்கி உந்தித் தள்ளி சாம்பலாகும் விட்டில் பூச்சிகள் நாங்கள்! நாம் முட்டாள் பூச்சிகள் ! -Hameed S Lebbe-  

Read More

கல்முனை வெளித்தால் கிழக்கு வெளிக்கும்

கல்முனை வெளித்தால் கிழக்கு வெளிக்கும்.. கல்முனையே கிழக்கு வாசல், இருள் அகலும் கிழக்கு வெளிக்கும்.. மாற்றம்! மாற்றம்!! ஆம்!!! மாற்றம் ஒன்றே மாறாதது, இளைஞனே விழித்தெழு!!!! உனது பயணம் தொடர்ந்தால் கிழக்கு வெளிக்கும்.. கிழக்குச் சூரியனின் கீற்றுகள் பூமியைச் சுட்டெரிக்கின்றது. ஆயிரம் மெழுகுவர்த்திகள் அணிவகுத்து நிற்கின்றன. கிழக்குச் சூரியனின் கதிர்கள் சுடர்விட, மெழுகுவர்த்திகளின் தீபங்கள் ஒளியேற்ற வேஷதாரிகளின் வேர்கள் அடியோடு அறுந்து போகும், கிழக்கு வெளிக்கும்.. இஹ்லாஸுடன் இணைவோரை இதமாக இணைத்துக் கொள்ளும். எழுந்து வா இளைஞனே! இளைப்பாற நேரமில்லை ஒரு கணமாயினும் உனக்கு. கல்முனைத் தாய்க்கு அரவணைக்க மட்டுமே தெரியும். படைத்தவன் துணையோடு நீ எழுந்தால், உனது பயணம் தொடர்ந்தால் கல்முனை வெளிக்கும் கல்முனை வெளித்தால் கிழக்கு வெளிக்கும்.. -அபூ அய்யாஷ்-

Read More

பத்ர் களம்..!

பத்ர் களமே ! நீ தந்த படிப்பினைகள் பல கோடி கத்திக்கும் சக்தி இல்லை புத்திக்கும் சக்தி இல்லை பக்தி ஒன்றுக்கே சக்தி ! பல படை கொண்ட பலம் என்ன படைத்தவன் உதவி கிடைக்கயிலே காற்றில் பதராய் கலந்தாய் கால் இருந்தும் காற்றில் பறந்தாய் ! ஆயிரம் சமன் முன்னூற்றி பதின்மூனு எனும் புதிய சமன்பாடு தோன்றிய தியாக வரலாறு தியாக தீபம் சுடர்விட செங்குருதிக் கொடை கொண்டு பகை வென்ற களம் ! ஆணவம் நாதியற்று அழிந்திட்ட களம் அபூஜஹில் நாசத்தை அணைத்திட்ட களம் அஷ் ஸஹீத்கள் ஜனனித்த களம் அல்லாஹ்வின் உதவி அருளாய் இறங்கிய களம் அல் பத்ர் களம்….

Read More

ஆயுதங்கள் தேவைதான்.!

ஆயுதங்கள் தேவைதான் அதற்காக இரத்தக்கறை படிந்து துர்நாற்றம்வீசும் உன் பழைய துப்பாக்கிகள் எங்களுக்கு வேண்டாம் ஆயுதங்கள் தேவைதான் அதற்காக ஈவிரக்கமற்று சகோதரப் படுகொலை செய்த ஈன ஆயுதங்கள் எங்களுக்கு வேண்டாம் ஆயுதங்கள் தேவைதான் அதற்காக கூடவே இருந்து போராடிவிட்டு பொன்னுக்கும் பொண்ணுக்குமாக காட்டிக்கொடுத்த உன் கைகள் பட்ட ஆயுதம் எங்களுக்கு வேண்டாம் ஆயுதங்கள் தேவைதான் அதற்காக திண்ட கல்லையை நீ கொல்லையாய் எண்ணி திரும்பிருந்து கழிக்கும்போது காவல்காத்த நன்றிகெட்ட ஆயுதம் எங்களுக்கு வேண்டாம் ஆயுதங்கள் தேவைதான் இருந்தால் கொண்டுவா தீயிலிட்டு உருக்கி தோசம் கழித்து சாபம் நீக்கிட ஆயுதங்கள் தேவைதான் இருந்தால் கொண்டுவா தமிழ் முஸ்லிம் சிங்களவர் என்ற பேதங்கழைந்து உன்போன்ற மனிதகுல எதிரியோடு போராட எங்கள் இரட்சகனின் நாமத்தை அழ்ழாகு அக்பரென நாங்கள் ஓங்கி ஒலித்தால் உன் ஈரக்குலை மட்டுமல்ல ஆயுதங்களும் நிராயுதமாகிவிடும் புரிந்துகொள் இரும்பை…

Read More