புகைப்பட கலை தோன்றிய வரலாறு.

காலங்கள் ஓடினாலும் நினைவுகளை சுமந்து திரியும் ஒரு பொருள் புகைப்படம். நாம் அன்றாட வாழ்வில் பல நினைவுகளை சுமந்து செல்கின்றோம், அதை பின்னர் திரும்பிப் பார்ப்பதும் பிறருக்கு சொல்வதுவுமாய் விளங்கும் புகைப்படங்களால் நம்முள் ஏற்படும் மகிழ்விற்கு அளவுகோலே இல்லை. புகைப்படம் என்பது  தற்போது ஒரு பெரும் பொழுதுபோக்காய் மாறிவிட்டபோதிலும் அதன் மதிப்பு என்றுமே மாறாதது. நினைத்தபொழுது படம்பிடித்து நினைத்தவாறு பயன்படுத்தும் அளவு இன்றைய நாளில் புகைப்படம் என்ற சொல் மலிவாகிக் கிடக்கிறது. இந்தத் தலைமுறையின் விரல் நுனியில் இருக்கும் புகைப்படங்கள் போன தலைமுறைகளுக்கு ஒரு கனா! சிறுவயதில் காகிதத்தை மடித்து நிழற்கருவி செய்து நண்பனுடன் பல பொய் பாவனைகளை அச்சிட்டு விளையாடுவோம், அந்த பிம்பம் பிறருக்கு தெரியாத மாயக்கண்ணாடியே. நாளடைவில் திருவிழாக்களில் விற்கும் போலி நிழற்கருவி வாங்க தந்தையுடன் அடம்பிடித்து அதனைக்கொண்டு ஊர் முளுவதும் ‘நானும் ஒரு…

Read More

ராக்கெட்டுகள் ஏன் செங்குத்தாக ஏற்படுகிறது தெரியுமா

ராக்கெட்டுகளை விண்ணில் ஏவப்படுவதை நாம் பலமுறை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கின்றோம். ஏவுதளத்தில் செங்குத்தாக நிறுத்தப்பட்டிருக்கும் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் முடிந்ததும்  தீப்புலம்பையும்  ஏராளமான புகையைக் கக்கிக் கொண்டு செங்குத்தாக மேலெழுந்து விண்வெளியை நோக்கி புறப்பட்டு செல்லும் ராக்கெட்டுகள் ஏன் செங்குத்தாக ஏவப்படுகின்றன. அதேபோல் மனிதர்களை தாங்கிச்செல்லும்  விண்கலங்களும் ராக்கெட்டுடன் இணைத்து ஏன் செங்குத்தாகவே ஏவப்படுகின்றன விண்வெளியிலிருந்து பூமிக்கு திரும்பும் விண்கலங்கள் விமானங்களை runway  இல் தரை போலவே  தரையிறங்கும்போது  ஏன் விண்வெளிக்கு ஏவப்படும் போது மட்டும் ஏன் செங்குத்தாக ஏற்படுகின்றன. என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம். ராக்கெட் என்பது விண்வெளிக்கு செயற்கைக் கோள்கள், மனிதனை தங்கிச்செல்லும்  விண்கலங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல உதவும் ஒர்  ஊர்தியாகும்.  ராக்கெட்டுகள் விமானங்களை போல arodainamic  எனப்படும் காற்றியக்கவியல் இன அடிப்படையில் பறப்பதில்லை மாறாக ஒவ்வொரு வினைக்கும் அதற்கு…

Read More

ஈக்வேடாரில் புதிதாக காணப்பட்ட தேன்சிட்டு காக்கப்படுமா?

ஈக்வேடாரில் புதியவகை ஹம்மிங் பேர்ட் (தேன்சிட்டு) ஒன்று சர்வதேச பறவையியலாளர் குழு ஒன்றால் காணப்பட்டுள்ளது. அந்த பறவைக்கு ஒரியோட்ரோகிலஸ் சைனோலெமஸ் அல்லது நீல கழுத்து ஹில்ஸ்டார் என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு அங்குல நீளத்திற்கு கரு நீல கழுத்து இருப்பதும் இதற்கொரு காரணம். ‘பல்லுயிர் பெருக்கம்’ ஈக்வேடாரரில் பல்லுயிர் பெருக்கம் சிறப்பாக உள்ளது. இந்நாட்டில் மட்டும் 132 வகை ‘ஹம்மிங் பேர்ட்’கள் உள்ளன. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நீல கழுத்து ஹில்ஸ்டார்கள் மொத்தமே சுமார் 300 தான் உள்ளதாக கூறும் பறவையியல்யாளர்கள், இந்த இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக கூறுகின்றனர். ஈக்வேடார், வெனிசுவேலா, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளை சேர்ந்த பறவையியலாளர்கள் குழு இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளது. இந்த குழுவுக்கு ஃப்ரான்சிஸ்கோ தலைமை தாங்கினார். அச்சுறுத்தலில் வாழ்விடம் பசிபிக் பெருங்கடல் அருகே உள்ளா லோஜா மற்றும் எல் ஒரோ…

Read More

860 கிலோ ‘யானைப் பறவை’தான் உலகின் மிகப்பெரியது: ஆய்வாளர்களின் விவாதம் முடிவுக்கு வந்தது

உலகிலேயே மிகப்பெரிய பறவை எது ஆய்வாளர்கள் மத்தியில் நீண்ட விவாதம் எழுந்துவந்த நிலையில், மடகாஸ்கரில் வாழ்ந்த 860 கிலோ எடை கொண்ட யானைப் பறவைதான் உலகின் மிகப்பெரியது என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஆய்வாளர்கள் மத்தியில் நீண்டகாலமாக நீடித்து வந்த வாதம், ஆய்வுகள் முடிவுக்கு வந்துள்ளது. உலகின் மிகப்பெரிய பறவையாக கருதப்படும் யானைப் பறவை வரோம்பி டைட்டான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் இந்தப் பறவை வாழ்ந்திருக்கலாம், அங்கு மனிதர்கள் மெல்லக் குடியேறியபின் அந்தப் பறவை அழிவைச் சந்தித்து இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வரோம்பி டைட்டான் பறவையின் எலும்புகள், முட்டைகள், எச்சங்கள் ஆகியவற்றை கைப்பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் இந்தப் பறவையின் எடை ஏறக்குறைய 860 கிலோ இருந்திருக்கலாம், சராசரியாக 650 கிலோ எடை வரை இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள்…

Read More

கடலில் 49 நாள்கள் திக்குதெரியாமல் தவித்து உயிர்பிழைத்த 19 வயது இளைஞரின் கதை

இந்தோனீசிய இளைஞர் ஒருவர் நாற்பத்து ஒன்பது நாள்கள் கடலில் திக்கு தெரியாமல் தவித்து மீண்டிருக்கிறார். ஒரு மீன்பிடி குடிசையில் கடல் நீரை குடித்து, தனது குடிசை படகில் இருந்து மரக்கட்டைகளை பயன்படுத்தி கடல் மீன்களை உண்டு இவ்வளவு நாள்கள் தாக்குப்பிடித்திருக்கிறார். இந்தோனீசிய கடல் பகுதியில் இருந்து 77 மைல் (125 கிமி) தொலைவில் ஒரு மீன்பிடி குடிசையில் அல்டி நோவல் அடிலங் இருந்துவந்தார். கடந்த ஜூலை மாதம் கடுமையான சூறாவளி காற்று காரணமாக 19 வயது இளைஞர் அடிலங் திக்குதெரியாதநிலையில் குவாம் கடல் பகுதியில் தனித்துவிடப்பட்டார். பனாமா கப்பல் ஒன்று மூலமாக அவர் மீட்கப்பட்டார். இந்தோனீசியாவின் சுலாவெசி தீவைச் சேர்ந்த அந்த பத்தொன்பது வயது இளைஞர் ‘ராம்பாங்’ எனப்படும் துடுப்புகளற்ற, எந்திரம் இல்லாத ஒரு மிதவை மீன்பிடி குடிசையில் வேலை செய்துவந்தார். ராம்பாங் விளக்குகளை போடுவதன் மூலம்…

Read More

பணத்துக்காக ஓர் இளைஞன் ‘விலைமகன்’ ஆன கதை

நீ எங்கே நிற்கிறாய் என்று தெரியுமா? உடலை விற்கும் சந்தை இது.’ இந்த கேள்வியை எதிர்கொள்ளும் நான், ஒரு ஆண், சிவப்பு விளக்கு பகுதி என அறியப்படும் உடலுக்கு பணம் கொடுக்கும் வணிகத்தில் என்னை விற்பனை செய்யத் தயாராக இருக்கிறேன். “எனக்கு தெரியும், ஆனால் எனக்கு பணம் தேவை, அதனால் இதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று பதில் சொன்னேன். என்னிடம் கேள்வி கேட்டது நடுத்தர வயதில் இருக்கும் ஒரு பெண்… இல்லை திருநங்கை. முதன்முறையாக அவரைப் பார்த்தபோது எனக்கு பயமாக இருந்தது. என்னுடைய பதிலுக்கு அவரின் மறுமொழி என்ன தெரியுமா? ‘உனக்கு தன்மானம் ஏன் கர்வம் என்றே சொல்கிறேன், அது அதிகமாக இருக்கிறது, இந்தத் தொழிலில் அது வேலைக்கு ஆகாது’ என்று அவர் சொன்னது, என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தினமும் ஒன்பது மணி நேரம் தொழில்நுட்ப…

Read More

ஒருபாலுறவில் ஈடுபட்ட மலேசிய பெண்களுக்கு பிரம்படி தண்டனை

ஒருபாலுறவு – பெண்களுக்கு பிரம்படி தண்டனை காரில் ஒருபாலுறவில் ஈடுபட்ட இரண்டு மலேசிய பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கி அந்நாட்டில் உள்ள ஷரியா (மத கோட்பாடுகள் தொடர்புடைய) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெரன்காணு மாகாணத்தில் உள்ள ஷரியா உயர் நீதிமன்றத்தில்  22 மற்றும் 32 வயதுடைய இந்த இரண்டு முஸ்லிம் பெண்களுக்கும் தலா 6 பிரம்படிகள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த மாகாணத்தில் ஒருபால் உறவு தொடர்பாக பொதுவெளியில் வழங்கப்பட்ட முதல் தண்டனை இதுதான் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

Read More

மீண்டும் அண்டார்டிகாவில் டைனோசர்கள்

அண்டார்டிகா என்றதும் உங்கள் மனகண்ணில் என்னவெல்லாம் வரும்? எங்கும் நிறைந்து இருக்கும் பனிப்பாறைகள், உச்சபட்ச குளிர், பயம் தரும் தனிமை – இவைதானே நம் நினைவில் வரும். அண்டார்டிகா குறித்து நம் நினைவில் வரையப்பட்ட சித்திரங்கள் இவைதான். நமக்கு கற்பிக்கப்பட்டவையும் இவைதான். ஆனால், அந்த நிலத்தில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? இப்போது எங்கும் பனிக்கட்டி படர்ந்திருக்கும் அந்த நிலத்தில் ஒரு காலத்தில் காடு இருந்திருக்கிறது. அந்த காட்டில் டைனோசர்கள் உலவி இருக்கின்றன. எப்படி இது சாத்தியம்? குளிர்பிரதேசமாக அறியப்பட்ட ஒரு நிலத்தில் எப்படி வெப்பமும், காடும் இருந்திருக்கும்? ‘கிரிட்டாஸியஸ் காலம்’ இதனை புரிந்துக் கொள்ள நாம் பின்னோக்கி பயணிக்க வேண்டும். நில வரலாற்று காலத்தில் நாம் பின்னோக்கி செல்ல வேண்டும். 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கிரிட்டாஸியஸ் காலம் என அறியப்பட்ட…

Read More

குவைத் சாலையில் சுற்றிய சிங்கம் மக்கள்பீதி !

குவைத் நாட்டிலுள்ள கபாத் மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் பெரிய சிங்கம் ஒன்று சுற்றித் திரிந்த வீடியோவை அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். நல்லவேளையாக யாரையும் தாக்குவதற்கு முன்பே அதைப் பாதுகாப்பாகப் பிடித்துவிட்டனர். இச்சிங்கத்தை யாரோ ஒருவர் செல்லப்பிராணியாக வீட்டில் வளர்த்து வந்திருக்கவேண்டும். அங்கிருந்துதான் இது தப்பி வந்து சாலைகளில் திரிந்துள்ளது என்று அதிகாரிகள் கருதுகின்றனர். பிடிபட்ட சிங்கம் தற்போது குவைத் விலங்குகாட்சி சாலையில் சேர்க்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் காவல், அல்-நஜ்தா காவல்துறை ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் சிங்கம் உலவித் திரிந்த செய்தி கிடைத்ததும் அவ்விடத்துக்கு விரைந்தனர். பின்பு மயக்க ஊசி செலுத்தி அதனைப் பிடித்துள்ளனர் என்று உள்ளூர் செய்தி ஊடகங்ககள் தெரிவிக்கின்றன. “இது யாரோ வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்துவந்த சிங்கம்தான். அவரைத் தேடி வருகிறோம். சிக்கினால் மூன்றாண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். வன விலங்குகளை வீட்டில்…

Read More