அரவிந்த் கெஜிரிவாலின் இன்னுமோர் முகம்.

டெல்லி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே எழுத நினைத்தேன் ஆனால் எல்லோரும் ஒரு திசையில் போகும்போது நாம் மாற்றமாப் போக வேண்டாம் என அமைதியாகிவிட்டேன் ஆனால் இன்று தேர்தல் முடிந்து முடிவும் வந்துவிட்டதால் எழுதுகிறேன்! டெல்லியில் பாஜகவை ஆம்ஆத்மி வென்றதால் நாட்டிற்கும் மதச்சார்பின்மை மற்றும் இஸ்லாமிய சமூகத்திற்கும் ஏதோ விடிமோட்சம் பிறந்துவிட்டதுபோல பலர் புலங்காகிதம் அடைகின்றனர் ? ஆனால் உண்மையில்….. அரவிந்த் கெஜிரிவாலுக்கும் அமீத்ஷாவிற்கும் ஊசி முனையளவே வித்தியாசம் ! ஆமாம் பயங்கரவாத பாஜக அரசு தங்களின் ஐடியாலஜியின் அடிப்படைத் திட்டங்களான காஷ்மீரின் 370 சிறப்பு அந்தஸ்து நீக்கம் இஸ்லாமியர்களுக்கு எதிரான முத்தலாக் தடைச்சட்டம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திருத்தம் ஆகியவற்றிர்க்கு முழு ஆதரவுக் கொடுத்தது! டெல்லி JNU மற்றும் ஜாமிய மாணவப் போராட்டம் மற்றும் அந்த மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, காவி…

Read More

கருணா அம்மானுக்கு கிழக்கில் இருந்து பகிரங்க மடல்.

கருணா அம்மான் அவர்களுக்கு ! ஐயா! “ஒரே இரவில் இரண்டாயிரம் ஏக்கருக்கும் அதிகமான தமிழர் காணிகளை அபகரித்தவர்தான் அதாவுல்லா” என்ற செய்தியை தினக்குரல் பத்திரிக்கையில் காணக் கிடைத்தது ஐயா! 1987 ஜூலை 29ல் ஜே.ஆர்-ராஜிவ் ஆகியோரால் கைச்சாத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக 1987 நவம்பர் 14ல் 13வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. இத்திருத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாண சபை முறை அமுலுக்கு வந்தது. இணைந்த வட கிழக்கு உள்ளிட்ட ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் இம் முறை சிபார்சு செய்யப்பட்டது. எனினும் மாகாண சபை முறை மூலம் வட-கிழக்கிற்குப் பகிரப்பட்ட அதிகாரங்கள் பெரும் பாலும் தமிழ் அரசியல் கட்சிகளிடமே கையளிக்கப்பட்டது. 1981ம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பீட்டின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் 72.59 வீதமாகவும் (238,216) முஸ்லிம்கள் 24.17 வீதமாகவும் (79,317), சிங்களவர்கள் 3.24 வீதமாகவும் (10,646) வாழ்கின்றனர்.…

Read More

புத்தளத்தின் அவலம் கேளீர் !

  ஒரு குழந்தையின் அழுகைக்கு நொடிகளில் ஓடிவரும் தாய்… வித்தியாச சத்தமென்றால் சில நிமிடங்களில் ஓடிவரும் பக்கத்து வீடு… தெருவிலோர் கடை எரிந்தால் யாரென்றும் பாராமல் உடனடியாய் நீரிறைக்கும் ஊர் சனம்… இதுதான் இதுவரை நாம் கண்ட மனித இயல்பு… ஆனால், ஒரு பிரதேசம் 100 நாட்கள் கத்தியும், ஊர்வலம் நடாத்தியும், பெண்கள் குழந்தைகள் மழையில் நனைந்து வீதியில் அழுதும் கூட.. கேளாத காதுகள் பாராளுமன்றத்தில் இருக்கின்றன..!! கேவலம் அவை மக்கள் பிரதிநிதிகள் என அழைக்கப்படுகின்றன…! மக்களுக்கு சேவை செய்ய வாகனமும் பெட்ரோலும் பெறுகின்றன…!! செத்த காதுகளே… புத்தளத்தில் ஒரு யுத்தம் நடக்கிறது…! சீமெந்து தூசாலும், அனல் மின் புகையாலும் நஞ்சூட்டப்பட்ட ஒரு சமூகத்தின் சந்ததி மீது இன்னொரு குப்பைப்பிசாசு ஏவப்பட்டு ஏறுகிறது…!! எங்கிருக்கிறீர்கள் நீங்கள்..? எல்லோரும் வந்து எங்களுக்காக போராட வேண்டிய நேரத்தில்… எந்த இருட்டறையில்…

Read More

கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அரபுக் கலாசாலையில் புதிய மாணவர்கள் அனுமதி.

கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அரபுக் கலாசாலையில் புதிய மாணவர்கள் அனுமதி. கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அரபுக் கலாசாலையில் 2019ம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் அனுமதிக்காக தகமைகளையுடைய மாணவர்களிடமிருந்து கிதாபு பிரிவு மற்றும் ஹிப்ளு பிரிவுகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. கிதாபு பிரிவுக்கு ஆண்டு 9  இற்கு  சித்தியடைந்த, 13 தொடக்கம் 16 வயதிற்கு உற்பட்டவராகவும், அல் குர்ஆனை தெளிவாக ஓதத் தெரிந்த, தமிழ் மொழியில் போதிய தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்  என்பதுடன் ஹிப்ளு பிரிவுக்கு ஆண்டு 6 இற்கு சித்தியடைந்த, அல் குர்ஆனை தெளிவாக ஓதத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். மேலும் G.C.E O/L , G.C.E A/L பரீட்சைகளுக்கான பாடங்களும், அல் ஆலிம், அஹதிய்யா இடைநிலை பரீட்சை இறுதிச் சான்றிதழ், இஸ்லாமிக் தீனிய்யாத் பரீட்சைகளுக்குமான பாடங்களும், கணனி வகுப்புகளும், தொழிநுட்ப பாடங்களான வீட்டு வயரிங்…

Read More

வாகன தடுப்பு வேலியினை அகற்றுவதற்கு கல்முனை மாநகரசபை முன்வர வேண்டும்.

கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக பல மாதங்களாக கவனிப்பாரற்று காணப்படும் வாகன தடுப்பு வேலியினால் அவ் வீ தியின்  போக்குவரத்திற்கும் பாதசாரிகளுக்கும்  இடைஞ்சலை ஏட்படுத்திவருவதாக பிரதேச மக்கள் முறையிடுகின்றனர். கல்முனையில் காணப்படும் உள் வீதிகளில் பிரபலமானதும் பெரிய வாகனங்களின் போக்குவரத்து அதிகமாகவும் உள்ள கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலேயே இக்குறித்த இரும்பினால் ஆன  வாகன தடுப்பு வேலி இடப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்திற்கும் பாதசாரிகளுக்கும்  இடைஞ்சலை ஏட்படுத்திவரும் வாகன தடுப்பு வேலியினை அகற்றுவதற்கு கல்முனை மாநகர சபை முன்வர வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகின்றனர். கல்முனை நிருபர்

Read More

குரங்குகளின் தொல்லை அவதியுறும் கிழக்கு மக்கள்

தமஅம்பாறை  மாவட்டத்தில் கல்முனை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் உள்ள   காட்டுப்பகுதியில் வாழ்ந்த குரங்குகள்வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை உண்டு விட்டு செல்வதாகவும் அத்தோடு அப்பகுதியில் பிரதான வீதிகளில் குறுக்காக  செல்வதனால்  வீதிகளில் நடமாட சிரமமாக உள்ளதாக மக்களும் விசனம் தெரிவிக்கின்றனர். மேலும் பயிர் நிலங்களில் மட்டுமல்லாது  வீட்டுத் தோட்டங்கள் போன்றவற்றையும் அழிக்கின்றன. இது தவிர இக்குரங்குகளின் தொல்லையினால் உணவு பொருட்களை பாதுகாக்க முடியாத போவதுடன் சிறிய குழந்தைகளை முற்றத்தில் விளையாட விடவும் பயமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அத்துடன்  இந்த குரங்குகளின் தொகை தினமும் அதிகரிப்பதாகவும் ஏனைய பிரதேசங்களில் இத்தொல்லையை தடுப்பதற்கு  வாயு துப்பாக்கிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. இக்  குரங்குகளின் செயற்பாட்டால் வகுப்பறைகளில் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்குரிய எந்த பொருட்களையும் பாதுகாத்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…

Read More

காணாமல் போன சிறுமியும் கண்டுகொள்ளாத சமூகமும் !

தன் ஒரே ஒரு பிள்ளையை பறிகொடுத்த ஒரு தாயின் வேண்டுகோள். பொத்துவில் மண்மலை வீதியில் வசித்த 10 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயதுடைய நிஜாமுதீன் சமீறா என்ற  மாணவியை கடந்த செப்டம்பர் 05 ஆம் திகதியில் இருந்து காணவில்லை. தேடி கலைத்துப் போன உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை பொலிஸார் மேற்கொள்ளவில்லை என கவலை தெரிவிகின்றனர். பொத்துவில் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் செய்தி அறிந்தும் அசமந்தம், பெரியபள்ளிவாயல் நிர்வாகம் அதேபோல் பொத்துவில் சமுக செயற்பாட்டாளர்கள்,அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் விடயம் அறிந்தும் இவ் விடயத்தை கண்டுகொள்ளவில்லை. ஏழை வீட்டு பிரச்சினை என்பதால் இவர்கள் ஏன் என்று கேட்கவிள்ளையா? என்றும் ஆதங்கம். சமிபகாலமாக பெண்கள் சிறுவர்கள் காணமல் போவது சம்மந்தமான செய்திகள் சர்வசாதாரணமான விடயமாக சமுகம் நோக்கின்றதா? என்ற…

Read More

கல்முனை முதல்வருக்கு ஒரு கடிதம்

கல்முனை மாநகர முதல்வரே உங்களுடைய உடனடி கவனத்திற்கு உங்கள் தலைப்புடன்கூடிய எனது ஆக்கம் *********************************************************************** வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப்படிகளை அகற்றுமாறு கல்முனை மாநகர முதல்வர் அறிவுறுத்தல்; ஒரு மாத காலம் அவகாசம்; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை..! +++++++++++++++++++++++++++++++++++++++++++++++ கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள வீட்டுப்படிகளை ஒரு மாத காலத்திற்குள் அகற்றுமாறு இன்று நீங்கள் விசேட அறிவுறுத்தல் ஒன்றை கல்முனை மாநகர மக்களுக்கு விடுத்திருப்பதானது வரவேற்கத்தக்கது. அதேநேரம் அதனை ஒரு மாத கால பகுதிக்குள் அகற்ற தவறும் பட்சத்தில் மாநகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை சட்ட ஏற்பாடுகளின் கீழ் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, குறித்த கட்டுமானங்கள் மாநகர சபையினால் அகற்றப்படும் என்பதுடன் அதற்கான செலவுகள் மற்றும் வழக்குச் செலவுகள் என்பவற்றுடன்…

Read More

பெயர்ப்பலகை சேதம் திருத்தியமைக்குமாறு மக்கள் விசனம்

பெயர்ப்பலகை சேதம் திருத்தியமைக்குமாறு மக்கள் விசனம். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைதியசாலைக்கு முன்னால் செல்கின்ற மதரசா  வீதியினுடைய பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டு நீண்ட நாட்களாக கவனிப்பார் இன்றி கிடக்கின்றது இதை சம்மந்தப்பட்டோர்  திருத்தி காட்சிக்கு வைக்குமாறு இவ் வீதியில் வசிக்கும் மக்கள் வேண்டுகின்றனர்.

Read More