கல்முனை வர்த்தகர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இராணுவ கட்டளைக் தளபதியுடனான சந்திப்பு.

முஸ்லிம்கள் 24 மணித்தியாலயத்தில் எந்த நேரத்திலும் பள்ளிவாசல்களுக்கு சென்று தமது கடமைகளில் ஈடுபட முடியும் என அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மஹிந்த முதலிகே தெரிவித்தார். கல்முனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் வர்த்தகர்கள், பள்ளி நிருவாகிகள்  மற்றும் உலமா சபையினருக்கும் இராணுவ கட்டளைத் தளபதிக்கும் இடையிலான சந்திப்பு. கல்முனை மாநகர பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று (22) கல்முனை ஆசாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. முஸ்லிம் மக்கள் புனித நோன்பு காலத்தில் தமது மார்க்க கடமைகளை பள்ளிவாசல்களில் நிறைவேற்றுவதில் எழுந்துள்ள அசௌகரியங்கள் பற்றி கருத்து தெரிவித்த போது அதற்கு பதிலளித்து உரையாற்றும் போதே கட்டளைத்தளபதி இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றும் போது, குர்ஆனிலோ அல்லது எந்த மதத்திலோ யாரையும் கொல்லும்படி கூறவில்லை. ஒருவர் இன்னெருவரை கொன்றுவிட்டு எவ்வாறு சுவர்க்கம் செல்ல முடியும்?. 1983…

Read More

எல்டீடீயினர் மீதான தடை நீடிப்பு

வளமான தேசங்களைத் துண்டாடும் வகையில் ஆயுதமுனைப் பயங்கரவாதத்தை முன்னெடுத்ததும் உலக பயங்கரவாதப் பட்டியலில் முன்னிலை வகித்ததுமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடித்திருப்பதாக இந்திய மத்திய அரசு நேற்றைய தினம் (14) பிரசுரிப்பொன்றை வெளியிட்டிருந்தது. 1967ம் ஆண்டின் சட்டவிரோத செயற்பாடுகள் மீதான தடைச் சட்டத்தின் அடிப்படையில் நீடிக்கப்பட்டுள்ள மேற்படி தடையானது, குறித்த அமைப்பானதை இந்திய இறைமைக்கு முற்றிலும் முரணான ஒன்று எனவும், கடந்த கால வரலாறுகள் முதற்கொண்டு இற்றைவரை இந்திய அரசின் தேசிய தலைவர்களுக்குப் பாரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்திய வகையில் முதன்மையான பயங்கரவாத அமைப்பு என்பதைக் கருத்தில் கொண்ட வகையிலுமே பிரசுரிக்கப்பட்டுள்ளது.  

Read More

அந்த 7 நாட்கள்

  ‘எனது காதலி உங்களது மனைவியாகலாம். உங்களது மனைவி எனக்கு ஒருபோதும் காதலியாக முடியாது’ 1980களின் முற்பகுதியில் கே. பாக்கியராஜ் திரைக்கதை வசனம் எழுதி, இயக்கி, நடித்த அந்த ஏழுநாட்கள் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் கதாநாயகன் தீர்க்கமாகச் சொல்லி விட்டு வெளியேறும் வார்த்தைகள்தான் இவை. ‘இன்னும் ஏழு நாட்களுக்குள் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பேன்’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து, அந்தக் காலஅவகாசம் முடிவடையும் தறுவாயில், பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கின்ற தீர்ப்பு பற்றிய செய்தி கிடைத்தவுடன், ஏனோ பாக்கியராஜின் கிளைமேக்ஸ் வசனங்கள் ஞாபகத்திற்கு வந்து போகின்றன. அவ்வசனங்களை இலங்கை அரசியலில் எதற்கு உவமானமாகச் சொல்ல முடியும் என்பது, அரசியல் அறிவுள்ள வாசகர்களுக்கு புரியும். அந்த ஏழு நாட்கள் திரைக்கதையின் படி பாக்கியராஜ் காதலித்த பெண்ணை வேறொருவர் திருமணம் முடிக்கின்றார். முதலிரவிலேயே…

Read More

வவுணதீவில் பொலிஸார் சுட்டுக்கொலை, மாவீரர் தினத்திடன் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்குகிறாதா?

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் மீது இனந் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு பொலீசார் உயிரிழந்துள்ளனர்.  குறித்த சம்பவம் நேற்று(29) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்துள்ளதுடன் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் . பிரசன்னா ஆகியோரே  இவ்வாறு உயிரிழந்துள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வழமைக்கு மாறாக மாவீரர் தினம் இம்முறை பரவலாக கொண்டாடப்பட்டதும் உணர்ச்சிபொங்கும் பேச்சுக்களும் முக்கிய இடம்பிடித்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் வெளிப்பாடாக இவ்வாறான பயங்கரவாத சம்பவங்கள் தலைதூக்குகின்றதா என்றும் இவ்வாறான செயல்கள் தலைதூக்கினால் இது மீண்டும் நாட்டை பின்னடையச் செய்யும் என்றும் மக்கள் கவலை தெறிவிக்கின்றனர்.

Read More

மண்சரிவு – மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும்

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மண்சரிவு ஆபத்துள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பதுளை மாவட்டத்திற்காக விடுக்கப்பட்டிருந்த இந்த மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை நீக்கப்பட்டிருப்பதாக அதன் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். எனினும், நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, பலாங்கொடை ஆகிய பிரதேசங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. ஆறுகளின் நீர்மட்டம் ஆபத்தான மட்டத்தில் இல்லை என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

President Maithripala Srisena’s address to the Nation

  I have decided to address the nation today in the context of the recent political developments in the country, I thought it was essential to clarify the path we have to take in the future and to describe the reasons and the background, why the current political change was necessary. Today, we are at the dawn of another year. On January 08, 2015, it was with so many expectations what nearly six million and two hundred thousand (6.25 million) people of my country chose me as your first servant…

Read More

கத்தியால் வெட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை – கரவெட்டியில் சம்பவம்

மகனைக் கத்தியால் வெட்டிவிட்டு, தந்தை தனது உயிரை மாய்த்த சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. கரவெட்டி தேவரையாளி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நேற்றிரவு (25)இடம்பெற்றது. சம்பவத்தில் பாக்கியராஜா (வயது – 63) என்பவரே தனது உயிரை மாய்த்தார். தந்தையில் கத்தி வெட்டுக்கு இலக்காகிய அவரது மகன் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தந்தை மகனை கத்தியால் இரண்டு தடவைகள் வெட்டியுள்ளார். சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றது. அதனையடுத்து மகனை மந்திகை வைத்தியசாலையில் உறவினர்கள் சேர்த்தனர். இந்த நிலையில் தந்தையின் செயல் குறித்து நெல்லியடிப. பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த நிலையில் இரவு 10 மணியளவில் தந்தை தனது வீட்டுக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் சகோதரிகள் இருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். சம்பவம் தொடர்பில் நெல்லியடிப்…

Read More

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமரானார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 11 வது பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னால் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதை தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் விரைவில் ஏற்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Read More

நீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்! ஒரு முறை அருந்தினாலே அதிசயம்!

உலக சுகாதார நிறுவனம் 2030 ஆம் ஆண்டுக்குள் நீரிழிவு நோய் உலகில் மரணத்தின் 7 வது முக்கிய காரணியாக இருக்கும் என்று கணித்துள்ளது. நீரிழிவு நோய் என்றால் என்ன? நீங்கள் உணவு சாப்பிட்ட பிறகு, உங்கள் உணவு உங்கள் குடலிலிருந்து உங்கள் கல்லீரலுக்கு செல்கிறது, இறுதியாக உங்கள் இரத்த ஓட்டத்தில் செல்கிறது. செல்கள் உங்கள் உடலில் இருந்து இரத்த சர்க்கரை பெற, கணையம் இன்சுலினை வெளியீடுகிறது, இது குளுக்கோஸை எடுத்து செல்கிறது. இன்சுலினின் வேலை (பல பணிகளுக்கிடையில்) என்னவென்றால் உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளை குறைக்க மற்றும் செல்லுலார் செயல்முறைகளை எரிப்பதற்கான திசுக்களுக்கு குளுக்கோஸை வழங்குவதாகும். இப்படி இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை முற்றிலுமாக தடுக்க எந்த மருத்துவ முறைகளும் இல்லை. அவற்றை கட்டுப்பாட்டில் வைத்து உயிர் வாழலாமே தவிர நோய் முற்றிலுமாக தீர்ந்த பாடில்லை. ஆனால்…

Read More

ஜெயசூர்யா, டிசில்வா, முரளிதரன்… இந்தியாவை ஓட ஓட விரட்டிய இலங்கையா இது?!

1996… கொல்கத்தாவில் நடந்த அந்த உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாருமே மறந்திருக்க முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அன்று அழவைத்தது ஒரு குட்டித் தீவின் கிரிக்கெட் அணி. இலங்கையின் எழுச்சி கிரிக்கெட்டில் அந்த நாளிலிருந்துதான் ஆரம்பித்தது. ஜெயசூர்யா என்னும் ஸ்டார் வானத்துக்கு வந்தது! அந்த நாள் மார்ச் 13,1996… கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இலங்கையும் இந்தியாவும் அரை இறுதிப்போட்டியில் மோதின. டாஸ் வென்ற இந்தியாவின் கேப்டன் முகமது அசாருதின் இலங்கையை முதலில் பேட் செய்ய அழைத்தார். எல்லாம் நல்லபடியாகத்தான் ஆரம்பித்தது. ஜவகல் ஶ்ரீநாத் வீசிய முதல் ஓவரிலேயே ஜெயசூர்யா, கலுவித்தரானா என இருவருமே அவுட். 35 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது இலங்கை. ஆனால் அதன்பிறகு வந்தார்கள் அரவிந்த டி சில்வாவும், மஹானமாவும். இருவரும் மாறி மாறி ரன்கள் அடிக்க, இலங்கை 50…

Read More