சகவாழ்வை நோக்கிய 2019 இன் வெசாக்

கௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம், இறப்பு முதலிய மூன்று முக்கிய நிகழ்வுகளைச் சுட்டி நிற்கும் வெசாக் பண்டிகையானது ஆண்டு தோறும் மே மாத மத்தியில் கொண்டாடப்படுகிற பௌத்தர்களின் ஓர் முக்கிய பண்டிகையாகும். சிங்கள மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையில் இம்முறை வெசாக் பண்டிகையானது சர்வமத குறிப்பாக முஸ்லிம்களின் ஏற்பாடு ரீதியான பங்களிப்புடன் நடந்து முடிந்திருப்பது குறித்து பலரின் கவனமும் இதன் மீது திரும்பியிருப்பது மட்டுமல்லாது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இலங்கை தேசம் காலணித்துவ ஆட்சிக்குள்ளாளாக்கப்படுவதற்கு முன்னரே இந்நாட்டை ஆண்ட சிங்கள ராஜாக்களின் நன்மதிப்பை வென்றதும், அதியுயர் அரச பதவிகளை நம்பகத்தன்மையோடு பொறுப்பாக்கப்பட்டதுமான இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம், இன்று அதே பௌத்தர்களின் ஓர் பண்டிகைக் கொண்டாட்டத்துக்கு உதவியமை குறித்து பெரிதும் சிலாகிக்கப்படுவதில் குறித்த சமூகம் வரலாறு நெடுகிலும் சந்தித்த பெரும் நிந்திப்புகளும்,…

Read More

நீங்கியது தடை

கடந்த வாரமளவில் வட மேல் மாகாணம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இனவாதிகளால் முஸ்லிம் வர்த்தகத்தை அழிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட கோரத் தாக்குதல்களை முன்னின்று நடாத்தியதன் பின்னணியைக் கண்டறியும் வகையிலும் போலிப் பிரச்சாரங்களை தடுக்கும் வகையிலும் தற்காலிகமாக முடக்கப்பட்ட சமூக ஊடகங்கள் மீதான தடை இன்றுடன் நீக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வருகிறது.

Read More

எல்டீடீயினர் மீதான தடை நீடிப்பு

வளமான தேசங்களைத் துண்டாடும் வகையில் ஆயுதமுனைப் பயங்கரவாதத்தை முன்னெடுத்ததும் உலக பயங்கரவாதப் பட்டியலில் முன்னிலை வகித்ததுமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடித்திருப்பதாக இந்திய மத்திய அரசு நேற்றைய தினம் (14) பிரசுரிப்பொன்றை வெளியிட்டிருந்தது. 1967ம் ஆண்டின் சட்டவிரோத செயற்பாடுகள் மீதான தடைச் சட்டத்தின் அடிப்படையில் நீடிக்கப்பட்டுள்ள மேற்படி தடையானது, குறித்த அமைப்பானதை இந்திய இறைமைக்கு முற்றிலும் முரணான ஒன்று எனவும், கடந்த கால வரலாறுகள் முதற்கொண்டு இற்றைவரை இந்திய அரசின் தேசிய தலைவர்களுக்குப் பாரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்திய வகையில் முதன்மையான பயங்கரவாத அமைப்பு என்பதைக் கருத்தில் கொண்ட வகையிலுமே பிரசுரிக்கப்பட்டுள்ளது.  

Read More

சீனாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜனாதிபதி கைச்சாத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சீன அரசுடன் இரு வகையான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை (15) கைச்சாத்திடவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கை எதிர்கொண்ட மிலேச்சத்தனம் தொடர்பாக சீன அதிபர் ஸீ ஜின் பிங்குடன் கலந்துரையாடவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார். இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் பேசிய பா.உ சியம்பலாப்பிட்டிய, கடந்த (21) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த தாக்குதலில்  ஷங்ரி-லா ஹோட்டல் தாக்கப்பட்டது குறித்து சீனா பெருத்த அதிர்ச்சியுடனிருப்பதாக தெரிவித்த அவர் ஜனாதிபதி சீன அரசுடனான எதிர்கால பொருளாதார முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். நேற்றைய தினம் (13) சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி சீன தலைநகர் பீஜிங்கில் நாளை நடைபெறவுள்ள ஆசிய நாகரீகங்களின் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதோடு தேசிய பாதுகாப்பு, இலங்கையின் அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய மூன்று…

Read More

அமைச்சர் ரிஷாதுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இன்று (14) நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைத் தயார் செய்து கைச்சாத்திட்டுள்ளனர். மேற்படி பிரேரணையானது தீவிரவாதத்தைப் பரப்புகின்ற ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் தாம் அதிருப்தியடைவதாக எத்திவைக்கிறது. மேலும் குறித்த பிரேரணை தொடர்பில் விளக்கமளித்த பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் கூட்டு எதிரணியனரின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான உதய கம்மன்பில சபாநாயகரிடம் கையளிப்பது உள்ளிட்ட முக்கியமான தீர்மானங்கள் குறித்து நாளை (15) நடைபெறவுள்ள கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படுமென தெரிவித்தார்

Read More

மீண்டும் பொலிஸ் ஊரடங்கு அமுலில்

வட மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை அமுலில் இருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 4 மணியுடன் தளர்த்தப்பட்டு மீண்டும் பி.ப 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையான 12 மணி நேர பொலிஸ் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ள அதே வேளை நாடளாவிய ரீதியிலான பொலிஸ் ஊரடங்கு இன்று பி.ப 9 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மீண்டும் அமுலுக்கு வரவுள்ளது. குளியாபிட்டியவில் கடந்த மே 12 மற்றும் அதனைத் தொடர்ந்து வட மேல் மாகாணத்தின் பல ஊர்களிலும் முஸ்லிம்களின் சொத்துக்களை இலக்கு வைத்து இனவாதக் காடையர்களால் நடத்தப்பட்ட காட்டுதர்பார் தாக்குதலையடுத்தே மேற்படி ஊரடங்கு மறு அறிவித்தல் வரை அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. மேற்படி இனவாதத் தீயானது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவி விடாது…

Read More

கல்முனை வெளித்தால் கிழக்கு வெளிக்கும்

கல்முனை வெளித்தால் கிழக்கு வெளிக்கும்.. கல்முனையே கிழக்கு வாசல், இருள் அகலும் கிழக்கு வெளிக்கும்.. மாற்றம்! மாற்றம்!! ஆம்!!! மாற்றம் ஒன்றே மாறாதது, இளைஞனே விழித்தெழு!!!! உனது பயணம் தொடர்ந்தால் கிழக்கு வெளிக்கும்.. கிழக்குச் சூரியனின் கீற்றுகள் பூமியைச் சுட்டெரிக்கின்றது. ஆயிரம் மெழுகுவர்த்திகள் அணிவகுத்து நிற்கின்றன. கிழக்குச் சூரியனின் கதிர்கள் சுடர்விட, மெழுகுவர்த்திகளின் தீபங்கள் ஒளியேற்ற வேஷதாரிகளின் வேர்கள் அடியோடு அறுந்து போகும், கிழக்கு வெளிக்கும்.. இஹ்லாஸுடன் இணைவோரை இதமாக இணைத்துக் கொள்ளும். எழுந்து வா இளைஞனே! இளைப்பாற நேரமில்லை ஒரு கணமாயினும் உனக்கு. கல்முனைத் தாய்க்கு அரவணைக்க மட்டுமே தெரியும். படைத்தவன் துணையோடு நீ எழுந்தால், உனது பயணம் தொடர்ந்தால் கல்முனை வெளிக்கும் கல்முனை வெளித்தால் கிழக்கு வெளிக்கும்.. -அபூ அய்யாஷ்-

Read More

நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இலங்கை அணி

எதிர்வரும் செப்டெம்பர் 15 உடன் துபாயில் துவங்கவிருக்கும் 50 ஓவர்கள் கொண்ட ஆசிய கிண்ண தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவிருக்கும் இலங்கை அணி பாரிய நெருக்கடிக்குள் உள்ளாகியிருக்கின்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற முன் போட்டிப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் சகலதுறை ஆட்டக்காரருமான தனுஷ்க குணதிலக்கவுக்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக குழாமிலிருந்து உடனடியாக நீங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் இவருக்கு பகரமாக ஷெஹான் ஜயசூரியவும் இணைக்கப்பட்டுள்ளார். இதேவேளை ஒரு வருட காலமாக எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் பங்குகொள்ளாத லசித் மாலிங்க இணைக்கப்பட்டிருப்பது இலங்கை அணிக்கு ஒரு பலமாக இருந்த போதிலும் சென்ற வாரம் இதே போன்றதொரு பயிற்சியின் போது அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமாலுக்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரும் குழாமிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றமையே இலங்கை…

Read More

பிணை முறி விவகாரத்தில் அடுத்த விக்கட் ரவி கருணாநாயக்க

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க மீது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்கானது 2017 ஆகஸ்ட் 2 இல் பிணை முறி ஆணைக்குழுவினரின் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் பிழையானவை என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது. மேலும் எதிர்வரும் செப்டெம்பர் 28 வரை மேலதிக விசாரணைகளுக்காக பிரதான நீதவான் ரங்க பண்டாரவினால் மேற்படி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பு: பிணை முறி விவகாரத்தில் நடந்தேறியவை சம்மந்தமாக எதிர்வரும் காலங்களில் “தீப்பொறி” இணையத்தளத்தில் விரிவான ஓர் ஆய்வுப் பார்வையினை காணலாம்.

Read More

ஸ்திரமற்ற பொருளாதாரக் கொள்கையினாலேயே அதிகரித்த எரிபொருள் விலையேற்றம்!

நடப்பு அரசாங்கத்தினது ஸ்திரமற்ற பொருளாதார கொள்கையே அதிகரித்த எரிபொருள் விலையேற்றத்திற்கான காரணம் என சாடுகிறார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். பந்துல குணவர்த்தன. நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டே மேற்படி கருத்தை அவர் முன்வைத்திருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது, “பணத்தின் அதீத பெறுமதி வீழ்ச்சியானது, நாட்டினுடைய பொருளாதார வீழ்ச்சியினை மேலும் வலுவடையச் செய்திருப்பதோடு, நாட்டு மக்களுக்கு எந்தவொரு நலனையும் இந்த அரசினால் முன்னெடுக்க முடியாமலும் உள்ளது. மேலும், முன்னைய அரசின் ஆட்சியின் போது உலக சந்தையில் எரிபொருளுக்கு அதிகரித்த விலை நிலவிய போதும், எம்மால் குறைந்ததும், நியாயமானதுமான விலையில் எரிபொருளை நாட்டு மக்களுக்கு வழங்க முடியுமாக இருந்தது. ஆனால், இன்றைய தேதியில் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை கணிசமான அளவு குறைந்து காணப்படுகிற போதும், இவ் அரசால் குறைவான விலைக்கு எரிபொருளை…

Read More