பனிப் பாறை சரிவில் சிக்கி 50 பேர் பலி துருக்கியில் சம்பவம்.

துருக்கியின் வான் மாகாணத்தில் பனிப்பாறை சரிவில் சிக்கி பலர் பலியாகி உள்ளனர், பனிப்பாறை சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மீட்பு பணியாளர்களும் அவர்களுக்கு உதவச்சென்ற பொதுமக்களும் தொடரும் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி காணாமல் போயுள்ளார்கள், சம்பவ இடத்துக்கு விரைந்த மேலதிக மீட்பு படையினர் கடும் பனிப்பொழிவுக்கும் மத்தியிலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதுவரை 8 பேர்களின் சடலங்களை மீட்பாளர்கள் கண்டெடுத்துள்ளார்கள், எஞ்சியோரை தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இதுவரை 50 பேர் வரை பலியாகி இருக்கலாம் என துருக்கியின் உள்நாட்டு அலுவல்கள் அமைசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அல் ஜஸிரா.

Read More

புகைப்பட கலை தோன்றிய வரலாறு.

காலங்கள் ஓடினாலும் நினைவுகளை சுமந்து திரியும் ஒரு பொருள் புகைப்படம். நாம் அன்றாட வாழ்வில் பல நினைவுகளை சுமந்து செல்கின்றோம், அதை பின்னர் திரும்பிப் பார்ப்பதும் பிறருக்கு சொல்வதுவுமாய் விளங்கும் புகைப்படங்களால் நம்முள் ஏற்படும் மகிழ்விற்கு அளவுகோலே இல்லை. புகைப்படம் என்பது  தற்போது ஒரு பெரும் பொழுதுபோக்காய் மாறிவிட்டபோதிலும் அதன் மதிப்பு என்றுமே மாறாதது. நினைத்தபொழுது படம்பிடித்து நினைத்தவாறு பயன்படுத்தும் அளவு இன்றைய நாளில் புகைப்படம் என்ற சொல் மலிவாகிக் கிடக்கிறது. இந்தத் தலைமுறையின் விரல் நுனியில் இருக்கும் புகைப்படங்கள் போன தலைமுறைகளுக்கு ஒரு கனா! சிறுவயதில் காகிதத்தை மடித்து நிழற்கருவி செய்து நண்பனுடன் பல பொய் பாவனைகளை அச்சிட்டு விளையாடுவோம், அந்த பிம்பம் பிறருக்கு தெரியாத மாயக்கண்ணாடியே. நாளடைவில் திருவிழாக்களில் விற்கும் போலி நிழற்கருவி வாங்க தந்தையுடன் அடம்பிடித்து அதனைக்கொண்டு ஊர் முளுவதும் ‘நானும் ஒரு…

Read More

கொழும்பு வைத்தியரின் வீட்டில் வேலை செய்த பெண் மர்மமான முறையில் உடல் எரிந்த சடலமாக மீட்பு.

கொழும்பு மாலபே ரொபட் குணவர்தன மாவத்தையில் உள்ள மணநோய் வைத்தியர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்து வந்த மலையகப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் தான் வசித்து வந்த வீட்டில் மர்மமான முறையில் உடல் எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இவர் மலையகத்தின் மஸ்கொலிய சாமிமலையை பிரதேசத்தை சேர்ந்தவர் (சுபா) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என சந்தேகிக்கும் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றன.

Read More

ஓர் மண் மீட்புப் போராட்ட விண்ணப்பம், போராட வாரீர்.

அன்புடையீர்! கல்முனைத் தொகுதி என்பது……ஒரு தொகுதியும், ஒரு மாநகரசபையும் ஒரே எல்லையை உள்ளடக்கியதுதான் கல்முனைத் தொகுதியாகும். கேற் முதலியார் காரியப்பர் முதல் கல்முனைத் தொகுதியின் பிரதிநிதித்துவமும், கௌரவமும் பாதுகாக்கப்பட்டே வந்துள்ளது. எம்.எஸ்.காரியப்பரது காலம். அது கல்முனை விழித்துக்கொண்ட, அபிவிருத்தி கண்ட காலம். எம்.சி. அஹமது அவர்களுடையகாலம். இது அரசியல் அதிகாரம் செலுத்திய காலம். ஏ.ஆர்.மன்சூர் அவர்களுடைய காலம். கல்முனை சகல துறைகளிலும் அபிவிருத்தி கண்டகாலம். அஷ்ரப் அவர்களது காலம் சமுகத்துக்கு பேரும் புகழும் கிடைத்த காலம். தற்போதை 18 வருட காலம் இருண்ட காலம். 1989 முதல் இன்றுவரை பாராளுமன்றம், மாகாணசபை, மாநகரசபை சகலதிலும் அதிகாரம் செலுத்துவது SLMC தான். எம்.எஸ்.காரியப்பர் முதல் ஆழுமை உள்ளவர்களால் பாதுகாக்கப்பட்ட கல்முனையின் பிரதிநிதித்துவம் 2004ல் இளக்கப்பட்டது. அதற்கு காரணம் யார்? மக்களா? ஹரீசா? பேரியல், அதாவுல்லா, அன்வர் இஸ்மாயில் ஆகியோருடன்…

Read More

41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி,விஷமான மாலு பணிஸ்!

உணவு ஒவ்வாமை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்தின் கினிகத்தேன- களுகல சிங்கள வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 41 மாணவர்கள் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை உணவை உட்கொண்ட பின்னர் மாணவர்களுக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்டதாகவும் இதனால் 11 மாணவிகள் உள்ளடங்களாக 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, கினிகத்தேன பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்தப் பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் போது, மாணவர்களுக்கு மாலு பணிஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை உட்கொண்ட மாணவர்களே நோய்வாய்ப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நன்றி- மலைநாடு.

Read More

கத்தாரில் வீசா மோசடியில் ஈடுபட்ட 9 பேர் அடங்கிய கும்பல் அதிரடிக் கைது!

கத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 9 பேர் அடங்கிய கும்பலை கத்தார் உள்துறை அமைச்சின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தேடல் மற்றும் பின்தொடர்தல் திணைக்கள அதிகாரிகள் கத்தார் முழுதும் போலிக் கம்பனிகளின் பெயரில் வீசா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றது. அந்த வரிசையில் வீசாக்களை விற்பனை செய்து வந்த 9 பேர் கொண்ட கும்பல் சிக்கியுள்ளது. இவர்களில் ஆபிரிக்க நாட்டவர்களும், இலங்கையை சேர்ந்த நால்வரும் உள்ளடங்குகின்றனர். வீசா தொடர்பான விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் இந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்களுடன் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் முத்திரைகள், அடையாள அட்டைகள், வங்கி அட்டைகள், மற்றும் பெருந்தொகையான பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கழுத்தறுத்து கொலை.

யாழ்., பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி  ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கடலிக் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மாணவியை கொலை செய்து விட்டு, கொலையாளி தப்பி சென்றபோது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

Read More

தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது சடலம் நேற்றுமுன்தினம் வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு நீர் சதுப்பிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.  பல்கலைக்கழகத்திலிருந்து கடந்த 9 ம் திகதி வெளியேறிய மாணவன் விடுதிக்கு திரும்பவில்லை என்று சகமாணவர்கள் பொலிஸாருக்கு முறையிட்டிருந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது யாவரும் அறிந்தது.  இது தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவமானது சந்தேகங்களற்ற தற்கொலை என்ற முடிவுக்கு வந்துள்ளதாக மட்டக்களப்புக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைநெட் ற்கு தெரிவித்தார்.  சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாவது:  குறித்த மாணவனுக்கும் சிரேஷ்ட மாணவி ஒருவருக்குமிடையே தகாத தொடர்பு இருந்து வந்துள்ளது. இத்தொடர்பின் நிமிர்த்தம் யோகராஜன் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுத்திக்கு சென்றுள்ளார். இவர் இவ்வாறு தொடர்ந்து சென்று வந்துள்ளாரா என்பது…

Read More

உண்மையில் எது தமிழரின் புதுவருடப் பிறப்பு? தையா? சித்திரையா?

நித்திரையில் இருக்கும் தமிழா!சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டுஅண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததேஅறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்தரணி ஆண்ட தமிழனுக்குதை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! ”  என்ற பாரதிதாசன் வரிகளை படித்த போது “அட என்னா இவரு இப்புடி சொல்லிட்டு போயிட்டாரே…” என்று தான் எண்ணத் தோன்றியது. ஆம் தையா? சித்திரையா? எது தமிழரின் வருடப்பிறப்பு? என்ற கேள்விதான் இந்த எண்ணத்திற்கு காரணம்.  எதுவா இருந்தா என்ன அடுத்து சித்திரை வரப்போகுது கொண்டாடிருவம்.. அப்படியே தை வாரப்போ அதையும் கொண்டாடுவம். நமக்கு பலகாரந்தானே முக்கியம்…” இப்படியாக நினைத்துக் கொண்டே வரிகளை மறந்தேன். இருந்தாலும் இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் ஆர்வம் மட்டும் விலகவில்லை. உண்மையில் எது தமிழரின் புதுவருடப் பிறப்பு? தையா? சித்திரையா?. இந்த விடயத்தை அரசியலாகவும் மாற்றிவிட்டனர். நெடுங்கால பிரச்சார யுத்தமாகவே புத்தாண்டு விடயமும் மாறிப்போய்விட்டது.  அவர்…

Read More