கல்முனையில் தமிழ்தேசியத்தின் துரோகிகளால் திசைமாற்றப்பட்ட வெகுஜன போராட்டம்.

ஒடுக்கும் ஒரு அரசாங்கத்திற்கு எதிராக மக்களும், அரசியல் பிரதிநிதிகளும் வீதியில் இறங்கி , வெகுஜன தளத்தில் தமது “அடையாள எதிர்ப்பினை” காட்டுவதை இன்றைய அரசியல் சூழலில் இன்றியமையாத ஒரு ஜனநாயக முன்னெடுப்பாகவே கருதப்படுகின்றது. தென்னிலங்கையில் சிங்கள மக்களும், மாணவர்களும், தொழிற்சங்க அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், இன்றைய அரசாங்கத்திற்கு எதிராக , வெகுஜனத் தளத்தில் போராடியே வருகின்றனர். இன்றைய இனவாத மேலாதிக்க அரசாங்கத்தின் கபடத் திட்டங்களால் அண்மைக்காலமாக மிக மோசமாக, திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படும் கிழக்கு மாகாணத்தின் அரசியல் , நிர்வாகம் மற்றும் நிலம் தொடர்பான விவகாரங்களுக்காகவும், நீண்டகாலமாக தமிழ் , முஸ்லிம் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்காகவும், அம்மக்களின் மீதான அரச , இனவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் , தமிழ் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகளால் இன்று தொடங்கப்பட்டுள்ள , இந்த ஜனநாயக வெகுஜனப் போராட்டம்…

Read More

கல்முனையில் அனைத்து நிறுவனங்கள், வீடுகளிலும் தேசியக் கொடியை பறக்க விடுமாறு மாநகர முதல்வர் வேண்டுகோள்..!

நாளை 04-02-2021 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கை ஜனநாயக குடியரசின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விடுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்துள்ளதாவது; எமது தேசப்பற்றையும் ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் நாம் அனைவரும் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வோம். ஏனெனில் அரசு வேறு, அரசாங்கம் வேறு, அரசு என்பதும் அரசாங்கம் என்பதும் வெவ்வேறானவையாகும். அரசாங்கமானது காலத்திற்கு காலம் மாறக்கூடியதாகும். அரசு என்பது நிலையான இருப்பும் இறைமை கொண்டதுமாகும். இன, மத, கலாசார, மொழி வேறுபாடுகளைக் கடந்து, நாட்டுப் பிரஜைகளை ஒன்றிணைப்பது அரசாகும். இந்த அரசு…

Read More

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் கருணா அம்மான் கலந்துரையாடல்

பிரதமரின் மட்டு – அம்பாறை மாவட்ட இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) இன்று (02) கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்துவது சம்பந்தமாக இன்று துறைசார்ந்த அமைச்சர் சமல்ராஜபக்ச கருணா அம்மானை சந்தித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன் பிரகாரமாக உடனடியாக எல்லை நிர்ணய குழுவை அனுப்புவதாக வாக்குறுதி அழித்துள்ளார் அதுமாத்திரம் அல்ல கணக்காளரை நியமிக்கும் படி கருணா அம்மான் கேட்டு இருந்தார் அதையும் நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி வழங்கினார் அத்தோடு இதற்கான விளக்கம் மிகவும் சிறந்த முறையில் அவருக்கு அளிக்கபட்டது காரணம் என்னவென்றால் ஜனதிபதி மற்றும் பிரதமர் அவர்களும் கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர் கல்முனையை தரம் உயர்த்தி தருவோம் என்று. ஆகவே இதற்கான சகல ஆவணங்களும் அமைச்சரிடம் வளங்கபட்டிருக்கின்றது அதை மிகவும் தெளிவாக ஆராய்ந்து…

Read More

கல்முனை வர்த்தக சங்கத்தினால் நான்காம் கட்ட உதவி மெளலவிமார்களுக்கும் மற்றும் முஅத்தின்மார்களுக்கும் வழங்கப்பட்டது.

( எம்.எம். ஜெஸ்மின்,) கோவிட்- 19 (கொரோனா வைரஸ்) தொற்றின் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக இயல்வு வாழ்வை இழந்த மக்களின் கஷ்டங்களை போக்கும் வகையில் கல்முனை வர்த்தக சங்கம் பல கட்டமாக நிவாரப்பணிகளை முன்னெடுத்து வருகிறது. நான்காம் கட்டமாக புனித ரமழானில் தமது இயல்வு வாழ்கையை இழந்த கல்முனை பிரதேச பள்ளிவாசல்களில் கடமை புரியும் 90 மேற்பட்ட முஅத்தின்கள் மற்றும் மௌலவிமார்களுக்கான நிவாரப்பணியை முன்னெடுக்கும் செயற்திட்டம் இன்று (12) மாலை கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம் சித்தீக் தலைமையில் கல்முனை இக்பால் சனசமூக நிலைய கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அதில் கல்முனை பிரதேச அனைத்து பள்ளிவாசல்களிலும் கடமை புரியும் சகல முஅத்தின்கள் மற்றும் மௌலவிமார்களுக்கும் வழங்கிவைக்கப்பட்ட 5000 ரூபா இந்நிவாரண உதவிகள் கல்முனை வர்த்தக சங்கத்தினால் திரட்டப்பட்ட நிதி மூலம்…

Read More

கல்முனை வர்த்தக சங்கத்தினால் 07 மில்லியன் நிதி உதவி

(எம்.எம் ஜெஸ்மின்) உலகின் வல்லரசுகள் முதல் இலங்கை வரை ஸ்தம்பித்து வைத்திருக்கும் கோவிட்- 19 (கொரோனா வைரஸ்) தொற்றின் வேகம் காரணமாக பிரகடனம் செய்யப்பட்ட ஊரடங்கு கட்டளை, மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த மக்களின் பசியை போக்கும் வகையில் கல்முனை வர்த்தக சங்கம் சுமார் 70 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதியினை கல்முனை பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்களிடம் இருந்து அறவிடுசெய்து கல்முனை பிரதேசத்தில் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு வழங்கி வைத்தனர் அந்த வகையில் இச் செயற்திட்டத்தினை கல்முனை வர்த்தக சங்கத்தினர் 3 கட்டங்களாக செயற்படுத்தி வருகின்றனர். அதில் கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்களுக்கு ரூபாய் 968,000 நிதியும், கல்முனை இஸ்லாமாபாத் மக்களுக்கு ரூபாய் 750,000 நிதியும் பள்ளிவாசல்கள் ஊடாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கல்முனைக் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு அங்குள்ள…

Read More

கோரோனா பொதுமக்களின் பாதுகாப்பை பொதுமக்களே உறுதிப்படுத்த வேண்டும், மற்றும் அரச அதிகாரிகள் கண்காணிப்பில் கழுகுக்கண் கொண்டு கவனித்தல் வேண்டும்.

ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்ட பின் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டனர். இதன்போது சுகாதார துறையினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய Social distance எனும் சமுக இடைவெளியை பேணுவதில் தொடர்ந்தும் கவனயீனமாகவே நடந்துகொள்கின்றனர்.

Read More

கொரோனா தடுப்பு முகாமிற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் !

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு நிலைய தடுப்பு முகாமிற்கு கொண்டுவரப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன .இதனையடுத்து மாலை 3 மணிக்கு மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தின் முன் நூற்றுக்கு மேற்பட்ட பொதுக்கள் ஒன்றிணைந்தனர். இதனையடுத்து கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வைத்தியசாலை வீதி வழியாக வைத்தியசாலை முன் வந்தடைந்து வைத்தியசாலைக்கு முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை பிரதேசத்திலும் இந்த தடுப்பு முகாமிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் இடம்பெற்றது . -கனகராசா சரவணன்–

Read More

மஹர சிறைச்சாலை பள்ளிவாசல் கட்டிடம் அபகரிப்பு

மஹர சிறைச்சாலை பகுதியில் கடந்த 100 வருடங்களாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் பள்ளிவாசல் கட்டிடம் சிறைச்சாலை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டு அங்கு பௌத்த சமய வழிபாடுகள் நடாத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெப்ரவரி ஐந்தாம் திகதி இக்கட்டிடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு சிறைச்சாலை தலைமையதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமய நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ராகம நகர்ப்பகுதியிலும் பள்ளிவாசல் இல்லாத நிலையில் பிரதேச மக்கள் ஜும்மா மற்றும் அன்றாட தொழுகை, ஜனாஸா போன்ற விடயங்களை மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.  ஜனாதிபதியின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் சிறைச்சாலை நிர்வாகம், குறித்த இடம் நீண்ட காலமாக கைவிடப்பட்டிருந்த ஒரு கட்டிடம் என விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ராகமையின் அண்மைய ஜனாஸா நிகழ்வுகளுக்குக் கூட தேவையான கழுவும் கட்டில், சந்தக்கு போன்றவற்றை மாபோல பள்ளிவாசலில் இருந்தே பெற்றுக்கொண்டுள்ளதுடன்,…

Read More

சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை !

சாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான வர்த்தமானி வெளிவந்தமையே தனக்கு தெரியாதென பொதுநிர்வாக அமைச்சர் கையை விரித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று அமைச்சரவை கூடியது. இதன்போது இந்த விடயத்தை பிரஸ்தாபித்த அமைச்சர் விமல் வீரவன்ச , சாய்ந்தமருது நகரசபை பிரகடனமானது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். அது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய , கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தையும் , சாய்ந்தமருது நகரசபை விடயத்தையும் சேர்த்து தீர்வைக்கண்டு ஒரே வர்த்தமானியில் உள்ளடக்கி வெளியிட்டிருந்தால் இனங்களுக்கிடையில் சர்ச்சை எழுந்திருக்காதென சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனிடம் அமைச்சர்கள் வினவியபோது இப்படியொரு வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தது தனக்கே தெரியாதெனவும் அது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும்…

Read More

அதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்

2020ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதாக தரவுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளித்தார். இதன்போதே இந்த துஷ்பிரயோக புள்ளிவிவரங்கள் நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது இதன்படி, 2020இன் முதல் 15 நாட்களில் 142 துஷ்பிரயோக சம்பவங்கள், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகளில், 78 துஷ்பிரயோக சம்பவங்கள், 21 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள், 34 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. மேலும், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ்…

Read More